கீழக்கரையில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்…

கீழக்கரை நகர் நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் சனிக்கிழமை (12-05-2018) அன்று மாலை முஸ்லிம் பஜார் பகுதியில்  நடைபெற்றது.

தமிழகத்தில் இயக்குனர் சீமானை ஒருங்கிணைப்பாளராக கொண்டு இயங்கி வரும் நாம் தமிழர் கட்சி, தமிழகத்தை தமிழனே ஆள வேண்டும் என்ற முழக்கத்துடனும், ஊழலற்ற ஆட்சியை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியின் கொள்கை மற்றும் செயல்திட்டத்தை விளக்கும் விதமாக கொள்கை விளக்க கூட்டங்கள் நடத்தி வருகின்றனர்.  அதன் தொடர்ச்சியாக நேற்று (12-05-2018) கீழக்கரையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்திற்கு நகர் தலைவர் சுகுமார் தலைமை தாங்கினார். மேலும் நகர் செயலாளர் கீழை பிரபாகரன், இணை செயலாளர் ஹபில் ரகுமான், இளைஞர் பாசறை செயலாளர் வாசிம் அக்ரம், பொருளாளர் அயன்ராஜ் முன்னிலை வகித்தனர்.  மேலும் எழுச்சியுரையை மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் துரைமுருகன்  கலந்துகொண்டு உரையாற்றினார்.

இந்த பொதுக்கூட்டத்திற்கு கீழக்கரையில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்… அழைப்பார்களாக மாவட்ட செயலாளர் பத்மநாபன், தொகுதிசெயலாளர் வென்குளம் ராஜீ மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஏராளமான நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டனர்.  இறுதியாக இளைஞர் பாசறை இணைச் செயலாளர் இக்ரம்தீன் நன்றியுரையுடன் பொதுக்கூட்டம் நிறைவு பெற்றது.

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..