கீழக்கரை SDPI கட்சி சார்பாக பழச்சாறு பந்தல்..

கீழக்கரை  SDPI கட்சி இன்று (13-05-2018) அன்று வள்ளல் சீதக்காதி சாலை பிட்சா பேக்கரி எதிரில் கோடை காலத்தின் தாகம் தீர்க்க ரஸ்னா, டேங்க் போன்ற பானங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு கீழக்கரை SDPI கட்சி நகர  தலைவர் கீழை அஸ்ரப் தலைமையில் நகர் இணை செயலாளர். வருஷை இப்ராஹிம் அவர்கள் தொடங்கி வைத்தார்.

மேலும் இந்நிகழ்ச்சிக்கு தொகுதி துணை தலைவர். அபுபக்கர் சித்திக்,  நகர் துணை தலைவர்.நூருல் ஜமான்,  நகர் செயலாளர் காதர்,  பொருளாளர் ஜகுபர் சாதிக், கிழக்கு கிளை தலைவர் பகுருதீன், செயல் வீரர்கள் ஹுசைன் ரஹ்மான் ,அயூப், ஜமீன் முன்னிலையில்   300க்கும் மேற்பபட்ட பொது மக்கள் பயனடைந்தனர்.