அப்துல்கலாம் நினைவிடம் அருகே கார் விபத்து.. 3 பேர் பலி.. 8 பேர் படுகாயம் ..

இராமேஸ்வரம் அப்துல் கலாம் நினைவிடம் அருகே வேன் கார் நேருக்கு நேர் மோதி விபத்து மூன்று பேர் பலி 8 பேர் பாடுகாயம் அமைச்சர் மணிகண்டன் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்  மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம் கல்லல் கிராமத்தை சேர்ந்த ராமசாமி, ஜனனி,மலர்கொடி வினோதினி முருகேசன் உள்ளிட்ட 16 பேர் வேன் மூலம் ராமேஸ்வரம் சுற்றுலாவந்துள்ளனர். ராமேஸ்வரம் கோயில் மற்றும் கலாம் நினைவிடத்தை பார்த்துவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் கிராமத்தை சேர்ந்த பீர்ஹாவீத்(23) அஜ்மத்நிஷா(26) நஷிராபானு(45) ஷயிலாபானு(40) உள்ளிட்ட 16 பேர் மூன்றுவாகனங்களில் தனுஸ்கோடி செல்லவதற்காக வந்தனர். இந்த இரண்டுவாகனங்களும் கலாம் நினைவிடம் அருகேயுள்ள தண்ணீர் ஊற்று பகுதியில் ஏ காந்த ராமர் கோவில் அருகில் ராமேஸ்வரம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில்  நேருக்கு நேர்மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரில் வந்த நஷிராபானு சம்பவ இடத்திலே பலியானர். மேலும் பீர்ஹாவீத் சஷிலாபானு ஆகிய இரண்டுபேரும் படுகாயமடைந்தனர். அஜ்மத் நிஷா மற்றும் வேனில்வந்த டிரைவர் குமரேசன்(27) ராமசாமி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

இதனையடுத்து அனைவரையும் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் உதவியோடு மீட்டனர். ராமேஸ்வரத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவந்த தகவல்தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு  பாதுகாப்புக்கு வந்த காவல்துறை மற்றும் அமைச்சர் பயன்படுத்தும் வாகனத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.ராமேஸ்வரம் மருத்தவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் நஸ்ரியா பானு (57) உயிரிழந்தார். இராமேஸ்வரம் அரசு மருத்துவ மனைக்கு வந்த அமைச்சர் மணிகண்டன் ஆட்சியர் நடராஜன் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா மற்றும் அதிகாரிகள் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன் முதலுதவி அளிக்க உத்தரவிட்டதுடன் படுகாயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி மேல் சிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ராமநாதபுரம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லும் வழியில் பீர் காலித் (24) சகிலா பானு (50) ஆகிய இருவரும்  உயிரி ழந்தனர் விபத்தில் பலியானேர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. இந்த விபத்து குறித்து தங்கச்சிமடம் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும்இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிர் இழந்த சம்பவம் அவர்களின் சொந்த ஊரான  வாலிநோக்கத்தில் மிகுந்த சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.