உலகை திரும்ப வைத்த மலேசிய அதிபர் தேர்தல்.. தலைவருக்கு ஒரு உதாரணம் “மஹாதிர்”…

கல்விக்கு வயது ஒரு தடை இல்லை என்பது போல் அரசியலுக்கும் வயது இல்லை என்ற சொல்லுக்கு மலேசியாவின் புதிய பிரதமராக 92 வயதில் தேர்வு செய்யப்பட்ட டாக்டர் மஹாதிர் முஹம்மத்   ஒரு நிகழ்கால உதாரணம். இவர் உலகிலேயே வயதில் மூத்த பிரதமர். அவர் போட்டியிட்ட பகட்டன் ஹரப்பன் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி இம்முறை ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

கடந்த 1981 முதல் 2003 வரை 22 ஆண்டுகள் மலேசியாவின் பிரதமராக மஹாதிர் முஹம்மத் இருந்து வந்தார். அரசியலில் இருந்து ஓய்வு பெற்று நீண்ட காலத்துக்கு பிறகு புதிய கட்சியான பக்கட்டன் ஹரப்பன் கட்சியில் தன்னை இணைத்து கொண்டு மீண்டும் தேர்தலை சந்தித்தார். இதில் முன்னாள் தாய்  கட்சியான பரிசன் நேஷனலை வீழ்த்தி சரித்திர சாதனை படைத்துள்ளார்.

1957 ஆம் ஆண்டு மலேசியா ஆங்கிலேயரிடம் இருந்து  சுதந்திரம் அடைந்தது. அன்றிலிருந்து 61 ஆண்டுகள் பரிசன் நேஷனல் ஆட்சி செய்தது. 1990ல் அப்போதய பிரதமர் மஹாதிர் முஹம்மத் தலைமையில் நடந்த ஆட்சியில் மலேசியா “ஆசியாவின் புலிகள்” என்று வர்ணிக்கப்படும் அளவுக்கு அசுர வேகத்தில் பொருளாதார வளர்ச்சி அடைந்தது.

ஆகையால் பொது மக்களின் செல்வாக்கு  மற்றும்  அதிகாரத்துடனும் செயல்பட்டார். நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காக பல வகையான சீர்த்திருந்தங்களை கொண்டு வந்தார். அப்போதய துணை பிரதமராக இருந்த அன்வர் இப்ராஹிம் மீது ஊழல் குற்றச்சாட்டு நிரூப்பிக்கப்பட்டதால் கட்சியில் இருந்து உடனே நிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இன்னமும் முன்னாள் துணை பிரதமர் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் வெற்றிக்கு பிறகு ஆற்றிய உரையில், “நான் உயிரோடு தான் உள்ளேன்” என்று அவருக்கே உரிய  நகைச்சுவை பாணியில் குறிப்பிட்டுள்ளார். மலேசிய அரசியலில் மீண்டும் ஆதிக்கம் செலுத்தி ஊழலற்ற ஆட்சியை வழங்கி மக்கள் மனதில் இடம் பிடிப்பார் என்று அனைவரும் எதிர்ப்பார்த்த வண்ணம் உள்ளனர்.

இவரின் சிறந்த குணங்களில் ஒன்று, பார்வையாளர்களை கவரும்  வண்ணம் பேசும் திறன்தான்.  அதே போல் பத்திரிக்கையாளர் சந்திப்புகளில் பத்திரிக்கையாளர்களுக்கு கொடுக்கும் குறிப்புகளில் எந்த மாற்றமும் இல்லாமல் அச்சு பிறழாமல், அக்குறிப்பில் உள்ளது போலவே உரையாற்ற கூடியவர். இவர் சில வருடங்களுக்கு முன்பு ஐக்கிய அமீரகத்தில் பத்திரிக்கையாளர் மத்தியில் உரையாற்றியதை இன்றும் அங்குள்ள பத்திரிக்கையாளர்கள் நினைவு கூறுவார்கள்.