Home செய்திகள்கீழக்கரை செய்திகள் மனித அறிவுடன் போட்டி போடும் “கூகுள் அசிஸ்டன்ட்”.. விஞ்ஞான வளர்ச்சியில் ஒரு மைல் கல்…

மனித அறிவுடன் போட்டி போடும் “கூகுள் அசிஸ்டன்ட்”.. விஞ்ஞான வளர்ச்சியில் ஒரு மைல் கல்…

by Mohamed

நவீன உலகில் விஞ்ஞான வளர்ச்சி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.  தகவல் தொழில் நுட்பம் நாளுக்கு நாள் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.  ஒவ்வோறு வளர்ச்சியும்  மனித இனத்தின் பனிச்சுமையை குறைப்பதோடு மட்டுமில்லாமல் குறுகிய நேரத்தில் அதிகமான வேலைகளை முடிக்கவும், நேரத்தை சேமிக்கவும் ஏதுவாக அமைகிறது என்றால் மிகையாகாது.  அதே சமயம் ஒவ்வொரு நாணயத்திற்கும் இரண்டு பக்கம் உள்ளது போல், வளர்ச்சி சில கேடுகளை கொண்டிருந்தாலும், அதை சரியான முறையில் கையாண்டால் நிச்சயமாக பலன்கள் அதிகம்தான்.

இன்று சிறுவர் முதல் பெரியவர்கள் வரை தினமும் எதாவது ஒரு வகையில் கூகுள் தேடு தளத்தை உபயோகிக்க கூடியவர்களாகத்தான் இருப்பார்கள். வியாபாரம், மருத்துவம், உணவு, விளையாட்டு ,நோய் மற்றும் பல்வேறு  துறைகள் சம்பந்தமான தகவல்களை இணையதளம் மூலம் எப்படி பெறுவது என்று கேள்வி கேட்டால் சிறியவர் முதல் பெரியவர் வரை கூகிள் செர்ச் என்ஜின் (Google Search Engine) மூலம் தேடி எடுத்து விடலாம், அது இருக்கும் போது நமக்கு ஏது கவலை என்று உடனே பதிலளிப்பார்கள்.  இது போன்ற  அதிநவீன மென்பொருள் தயாரிப்புகளில் கூகிள் நிறுவனம் முன்னோடியாக உள்ளது என்றால் அதுதான் நவீன உலகின் யாதார்த்தம்.

அதன் வரிசையில் புதிய தயாரிப்பான கூகிள் அசிஸ்டெண்ட் (Google Assistant) என்கிற பெயரில் செயலி ஒன்று அறிமுகமாக உள்ளது.  இச்செயலியிடம் (கூகிள் அசிஸ்டெண்ட்  – Google Assistant)) நம் பணித் தேவை என்னவென்று பதிவு செய்தால் போதும், அதுவே சம்பந்தப்பட்ட துறையில் உள்ள நபரை தொடர்பு கொண்டு நம் தேவைகளை  பெற்றுத் தருகிறது.

ஆஹா இப்படி ஒரு செயலியா? என்று அனைவரையும் பிரம்மிப்படைய வைக்கிறது.  உதாரணமாக முடித்திருத்தம் செய்ய சலூனில் அப்பாயிண்ட்மெண்ட் பெற  வேண்டுமென்றால் அதுவே கால் செய்து நேரத்தையும் புக் செய்து விடுகிறது.

ஒருவருக்கு  நியமிக்கப்பட்ட உதவியாளர் தன்னுடைய முதலாளியின் தேவையை பூர்த்தி செய்வது போல் கட்டளையிட்டால் போதும் அடுத்த சில நிமிடங்களில் அனைத்தும் தயார் ஆகி விடும் என்று சொல்லும் அளவுக்கு தொழில் நுட்பம் உச்சத்தை அடைந்துள்ளது  என்பது தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின் மைல்கல் என்பதற்கு இச்செயலி ஒரு அடையாளம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!