விதிமுறைக்கு புறம்பாக தண்டிக்கப்பட்ட கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு ஆதரவாக திருப்பத்தூர், கீழக்கரை உட்பட பல இடங்களில் போராட்டம்..

சிவகங்கை மாவட்டத்தில் எந்த குற்றமும் செய்யாத அப்பாவி வி.ஏ.ஓ க்களுக்கு 17 அ மற்றும் 17ஆ பிரிவுகள் குறிப்பாணைகள் வழங்கிய மாவட்ட நிர்வாகத்தினை கண்டித்து திருப்பத்தூர் மற்றும் கீழக்கரை உட்பட பல இடங்களில் கிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த குறிப்பாணைக்கு காரணமாக கிராம நிர்வாக அதிகாரிகள்,  இதுவரை மூன்று கட்ட ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். ஜமாபந்தி புறக்கணிப்பு செய்துள்ளனர். பயீர்காப்பீட்டுக்கு வழங்கிய அடங்கலில் விஸ்தீரணம் வித்தியாசம் உள்ளது என ஒரு தவறான தகவலின் அடிப்படையில் குறிப்பாணைகள் போர்க்கால அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளனர்.  ஆனால் இதனை ஆய்வு செய்து அறிக்கை வழங்கிய அதிகாரிகள் பல தவறுகள் செய்துள்ளனர். மேலும் மற்ற தவறு செய்த  அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இதில்  வி ஏ ஒ . க்களுக்கு வழங்கப்பட வேண்டிய தகுதிகாண் பருவம்,  ஊதிய உயர்வு,  வழங்கப்படவில்லை. அதேபோல்  மாவட்ட மாறுதல் பெற்றவர்களை விடுவிக்கவும் இல்லை.  இந்த மாதிரியான சாதாரணமாக செய்ய வேண்டிய செயல்களை கூட செய்ய மறுக்கும் சிவகங்கை  மாவட்டத்திலுள்ள சார் ஆட்சியர்/கோட்ட நிர்வாகங்களையும்,  இதனை பல முறை எடுத்து கூறியும் கண்டுகொள்ளாத மாவட்ட ஆட்சியரையும் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பும் மாலை 5.45 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த மாநில மையம் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இன்று மாலை 5.45 மணியளவில் திருப்பத்தூர், கீழக்கரை மற்றும் பல  வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற  கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து  கிராம நிர்வாக அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.