இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் 4ம் ஆண்டு நிறைவு விழா..

இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் 4ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் கோடை கால எழுச்சி முகாமின் நிறைவு விழா வரும் வெள்ளிக்கிழமை 11-05-2018 மக்ரிப் தொழுகையை தொடர்ந்து கடற்கரை பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அலாவுதீன் கலந்து கொள்ள உள்ளார்.  இந்நிகழ்வின் சிறப்புரையை முன்னாள் திரைப்பட இயக்குனர் அமீருத்தீன் வழங்க உள்ளார்.  தலைமையுரையை இஸ்லாமிய சங்க தலைவர் முஹம்மது தவ்ஹீத் வழங்க உள்ளார்.

இவ்வருடத்தின் ஆண்டறிக்கையை இஸ்லாமிய கல்வி சங்கத்தின் துணைத்தலைவர் அஹமது ஃபாசில் வாசிக்க உள்ளார். மேலும் இந்நிகழ்ச்சிக்கு கல்வி சங்க செயலாளர் அஜ்மல்கான்,  சட்ட ஆலோசகர் மற்றும் உயர்நீதி மன்ற வழக்கறிஞர் சாலிஹ் ஹுசைன் மற்றும் பல முக்கிய மதரஸா நிர்வாகிகள், கல்வி நிலைய முதல்வர்கள்  முன்னிலை வகிக்க உள்ளனர்.

இந்நிகழ்ச்சி இஸ்லாமிய கல்வி சங்கம் பொருளாளர் சல்மான் கான் உரையுடன் நிறைவடைய உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.