விடாது துரத்தும் டெங்கு.. அச்சத்தில் கீழக்கரை மக்கள்.. என்றும் போல் உறக்கத்தில் நகராட்சி…:

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைக்கும் டெங்கு காய்ச்சலுக்கும் தொடரும் பந்தம் போல் தொடர்ச்சியாக பொது மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதித்த வண்ணம் உள்ளனர். இதற்கு முக்கிய கீழக்கரை நகரில் ஆங்காங்கே மழை போல் உருவெடுத்தது கிடக்கும் குப்பை கிடங்குகள்.  இது சம்பந்தமாக 6 மாதங்களுக்கு முன்பே SDPI, மக்கள் டீம், சட்ட போராளிகள், விடுதலை சிறுத்தை, நகர் நல இயக்கம், நாம் தமிழர் மற்றும் இன்னும் பல சமூக அமைப்புகளும் புகார் மனுக்களை அளித்தனர்.  அச்சமயத்தில் மாவட்ட ஆட்சி தலைவரும் கீழக்கரைக்கு வந்து நகராட்சி செய்ய வேண்டிய வேலைக்கு தனி நபர் மீது பல லட்சங்களை வசூல் செய்து விட்டு சென்றார், ஆனால் டெங்கு காய்ச்சலை நிரந்தரமாக ஒழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கீழக்கரையில் பழைய காவல் நிலையத்தில் இருந்து வடக்கு தெரு செல்லும் வழியில் உள்ள குப்பை கிடங்கு மற்றும்  3வது வார்டுக்குட்பட்ட முகமது காசிம் அப்பா தர்கா ரோடு  பகுதியில் சுவர் இடிந்து கிடக்கும்  பழைய குப்பை கிடங்கு ஆகியவைகளை உதாரணமாக சொல்லலாம்.  ஆனால் கவனிப்பாரற்று கிடக்கும் குப்பை கிடங்குகள் ஏராளம். அதேபோல்  இந்த  குப்பை கிடங்கு அருகில் வழிபாட்டு தலங்கள் கோயில்,மசூதி, வீடுகள் அதிகம் உள்ளதால், குப்பைகளினால் வரும் துர்நாற்றத்தால் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள்.

தற்சமயம் கீழக்கரையைச் சார்ந்த பலர் இராமநாதபுரம் மற்றும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்காக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதில்  கீழக்கரையில் 3/199 வார்டுக்குடபட்ட  புது கிழக்கு தெரு பகுதியே சார்ந்த முஹைதீன்  மகன் 10_வது படிக்கும் பள்ளி மாணவர் அப்சல், மீன் கடைத் தெரு 10/46வது வார்டு ஜெமில் கான் மகள் நஸ்மீன்,    10/59 வது வார்டுக்குட்பட்ட சேரன் தெரு பகுதியில் சுல்தான் தஸ்தகீர்  மகள் அபுரோஸ் நிஷா மற்றும் வடக்குத்தெரு 20வது வார்டு பகுதியில் முஹம்மது ஹுசைன்  மகன் அப்துல் ரஹ்மான் ஆகியோர் இராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக அறியப்படுகிறது.  இன்னும் பல நபர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என அத்தெரு மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது சம்பந்தமாக கீழக்கரை நகர் SDPI கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் “நகராட்சி நிர்வாகம் நகருக்குள் உள்ள குப்பை கிடங்குகளை நீக்காவிட்டால் மக்களை திரட்டி பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என கூறியுள்ளனர்.  மக்கள் வெகுண்டெழும் முன்பு தூக்கதில் இருந்து களையுமா???

புனித ரமலான் வாழ்த்துக்கள்..