இராமேஸ்வரம் நகராட்சியை கண்டித்து துப்புரவு தொழிலாளர்கள் உள்ளிருப்பு போரட்டம்…. சுற்றுலா தலமான இராமேஸ்வரத்தில் குப்பைகள் தேங்கும் அபாயம்…

இராமேஸ்வரம் நகராட்சி பகுதிக்கு நாள் தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கனக்கான  சுற்றுலாபயணிகள்  வந்து செல்லுகின்றனர்.  அவர்கள் பயன்படுத்தி  விட்டுச்செல்லும் குப்பைகள் மற்றும் இராமேஸ்வரம் தீவுக்கு உட்பட்ட  21 வார்டு பகுதிகளில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள 100 க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலளார்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் கடந்த 64 நாட்களாக துப்புரவு தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை இதனை கண்டித்து இன்று 100 க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் தங்களது பணிகளை புறக்கணித்து நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் நகராட்சி பகுதிகளில் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து துப்புரவு ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்வுள்ள 64 நாட்கள் ஊழியத்தை உடனே வழங்கிட வேண்டும் என துப்புரவு தொழிலாளகள் நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.