அமைப்புகளும், மனுக்களும் கூடினாலும் பிரச்சினைகளுக்கு கீழக்கரையில் தீர்வில்லை.. கீழக்கரை ஊர்மக்கள் / கூட்டமைப்பு சார்பாக மனு…

கீழக்கரை நகராட்சியில் நடைபெற்று வரும்  நிர்வாகச் சீர்கேடுகள் என்பது  சீர் செய்வது கடினம் என்ற அளவுக்கு புற்று நோய் போல் முற்றி கொண்டேதான் வருகிறது.  கீழக்கரையில் உள்ள அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த அமைப்புகள் மனுக்கள் கொடுத்தாலும் செவிடன் காதில் சங்கு ஊதிய கதையாகவே உள்ளது.

கடந்த 31.01.2018 அன்று கீழக்கரை நகராட்சி ஆணையாளராக இருந்த வசந்தி குறுகிய காலத்திலேயே பல அதிருப்பதிகளுடன்  பணியிடம் மாறுதலுக்கு பின்  பரமக்குடி ஆணையாளர் நாராயணன்  கீழக்கரை நகராட்சிக்கு கூடுதல் பொறுப்பேற்று பணி புரிந்து வருகிறார், அவரிடமும் மனுக்கள் குவிந்த வண்ணம்தான் உள்ளது.

இன்று (07/05/2018) கீழக்கரை ஊர்மக்கள் மற்றும் கீழக்கரை மக்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் மக்கள் நல பாதுகாப்பு கழகம், மக்கள் டீம், SDPI கட்சி, நிஷா பவுண்டேசன், விடுதலை சிறுத்தை ஹமீது யூசுஃப், கீழை பிரபாகரன், MSS.முகைதீன், முகைதீன் இபுராஹிம் மற்றும் இன்னும் பல சமூக ஆர்வலர்கள் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கீழக்கரை நகராட்சியில் ஏற்பட்டுள்ள நிர்வாக கேடுகளை பட்டியலிட்டு புகார் மனு அளித்துள்ளனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..