கீழக்கரை அல் பையினா அகாடெமி மற்றும் தமிழ்நாடு முஸ்லீம் கல்வி இயக்கம் நடத்தும் “நாளைய உலகம் நமதாகட்டும்.”

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வரும் மே மாதம் 10ம் தேதி வியாழக்கிழமை மாலை 06.00 மணிமுதல் 09.30 மணி வரை நாளைய உலகம் நமதாகட்டும் எனும் நிகழ்ச்சி அல் பையினா பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சி 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களை அறிவும் அதிகாரமும் கொண்ட ஆளுமைகளாக உருவாக்கவும், எதிர்காலத்தை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளவும் பயிற்சி களமாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் வடக்குத தெரு நாசா அமைப்பு உதவி செயலாளர் ஃபர்ஹான் பின் அஷ்ரஃப் “தொழுகையும் ஒழுக்கமும்” என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார். அதே போல் தமழ்நாடு முஸ்லீம் கல்வி இயக்கம் நெறியாளர் நிஷானா இஸ்மாயில் “கல்வி ஓர் இஸ்லாமிய பார்வையில்” என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார். அவர்களைத் தொடர்ந்து தமிழ்நாடு முஸ்லீம் கல்வி இயக்கம் உயர் கல்வி ஆலோசகர் முஹம்மது இஸ்மாயில் “என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளார்.


இந்த நிகழ்ச்சிக்கு ஆர்வமுள்ள மாணவ மாணவிகள் அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி சம்பந்தமான மேல் அதிக விபரங்களுக்கு 72005 48348,  98841 55565,  9884 990250 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.