இராமநாதபுரம்- கீழக்கரை ரோட்டில் தொடரும் வாகன விபத்துக்கள் – நேற்று இருவேறு வாகன விபத்து…

கீழக்கரை கண்ணாடி வாப்பா ஸ்கூல் எதிரில் கார் ஒன்று இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தினால் தார் சாலையை விட்டு  பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
பள்ளத்தில் விழுந்த காரை  முட்கள் மறைத்து விட்டதால், கார் விபத்தானது காலையிலேயே தெரிய வந்துள்ளது. பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மேலும் இந்த வாகனம் சென்னை நுங்கம்பாக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த வாகனம் சுற்றுலா வந்த சமயத்தில் விபத்து ஆகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. வாகனத்தின் ஓட்டுனர் மிகவும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டதால், உயிர் இருந்திருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.   ரிஜிஸ்ட்ரேசன் ஆக உள்ளது.
அதே போல் திருப்புல்லாணி டூவீலரில் சென்ற ஏர்வாடியை சேர்ந்த மீன் வியாபாரி முருகேசன் என்பவர் திருப்புல்லாணி அருகே சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ  இடத்திலேயே மரணம் அடைந்துள்ளார்.
விபத்தில் மரணம் அடைந்த நபரின் உடலை  காவல் துறையினர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..