தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் – அமீரகம் சார்பில் தமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு – 2018 ..

ஐக்கிய அரபு அமீரகத்தில் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பாக தமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு துபாய் நகரில் 28/04/2018 அன்று நடைபெற்றது.

இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாக  தமிழக முஸ்லிம் சமூகம் பலநூறு ஆண்டுகளாக வகித்திருந்த ” சர்வதேச வணிகத்தில் முதன்மை சமூகம் ”  என்ற வரலாற்று மரபை மீட்டெடுக்க வேண்டும் என்ற அடிப்படை நோக்கமாக இருந்தது.  மேலும் பொருளாதார மறுமலர்ச்சிக்கான தொலைதூர நோக்கு இலக்கின் முதல் நிகழ்வாக இந்த மாநாடு துபாயில்  நடைபெற்றது.

மேலும் இம்மாநாட்டில்  அரபுலகம் இந்தியா சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் தொழில் செய்யும் உம்மத்தின் இளம்  தொழில் முனைவோர் ஒருவரை ஒருவர்  தொழில் ரீதியாகவும், நட்பு ரீதியாகவும் அறிமுகப்படுத்தி கொள்ளும் வாய்ப்பாக அமைந்திருந்தது.

மேலும் இந்த மாநாட்டிற்கு  வருகை தந்திருந்த அனைவரும் தங்களது தொழில்  நிறுவனம் குறித்து ஒரு சிறிய அறிமுகம் செய்தனர். அதைத் தொடர்ந்து  GCC (GULF COOPERATIVE COUNCIL) என்ற 6 அரபுநாடுகள் மற்றும் இந்தியா, சிங்கப்பூர்  உள்ளிட்ட நாடுகளில் பெருகிவரும் தொழில் வாய்ப்புகள் மற்றும்  அதை முறையாக பயன்படுத்திக் கொள்ளும் வழிமுறைகள் குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டன.

இந்த மாநாட்டில் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் CMN.சலீமின் சிறப்பு மற்றும் அறிமுகவுரையை தொடர்ந்து வந்திருந்த வர்த்தக அனுபவசாலிகளும் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

இது போன்ற ஒருங்கிணைப்பு மாநாடு தொடர்ச்சியாக  நடைபெறும் என நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.