Home கட்டுரைகள் மே தினம் – சிறப்பு பார்வை…

மே.1, தொழிலாளர்கள் தினம், உழைக்கும் வர்க்கம் அனைவரும் கொண்டாடக் கூடிய நாள். இந்த மே.1 தொழிலாளர் தினமாக, சங்க சட்டமாக 1707 ம் ஆண்டு இயற்றப்பட்டது.  இந்த மே தினம் பல கால கட்டங்களில், தங்கள் உரிமைகளுக்காக போராடியதை நினைவு கூறும் நிகழ்வே இந்த மே தினம்.  இன்று தொழிலாளர்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு திட்டத்திற்கு பின்னாலும் பல தொழிலாளியின் அர்ப்பணிப்பும், போராட்டமும் நிச்சயமாக இருக்கும்.

இப்பொழுது புதிதாக வேலைக்கு சேரும் தொழில் வர்க்கம், தொழிற் சங்கங்களினால் எந்த பலனும் இல்லை  என்று தத்துவம் பேசும் தோழர்களின் கவனத்திற்கு சில விளக்கங்கள், சில கேள்விகள்..

1. உங்களின் பணிநியமன ஆணை (APPOINTMENT ORDER) சட்டம் எப்படி வந்தது தெரியுமா?..

2. உங்களுக்கு மாதமாதம்  இவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டுமென சொல்லும் சட்டம் எப்படி வந்தது தெரியுமா?..

3. பணிகொடை(GRATUITY), வருங்கால வைப்பு நிதி (PROVIDENT FUND),தொழிலாளர் காப்பீட்டு திட்டம்(EMPLOYEE STATE INSURANCE), என சமூக பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பான சட்டம் எப்படி வந்தது?..

4. போனஸ், விடுமுறைகள்(Sick leave, Casual leave & Earned leave) இவையெல்லாம் எப்படி வந்ததென தெரியுமா?..

இவைமட்டுமல்லாமல், தொழிலாளர்களை மறைமுகமாக பாதுகாக்ககூடிய, தொழிற்தகராறு சட்டம் (Industrial Disputes Act), தொழிற்சாலைகள் சட்டம் (Factories Act), நிறுவனங்கள் சட்டம் (Shop and Establishments Act) என 44தொழிலாளர் நலச்சட்டங்கள் எப்படி வந்தது தெரியுமா?…

இதுமட்டுமல்லாமல், தற்போதைய மத்திய அரசு முன்மொழிந்துள்ள FIX TERM AGREEMENT,  எனும் சட்ட  வரைவு நிரந்தர வேலைவாய்ப்பையே (Permanent Employment) பறிக்கும் என போராட்டகளத்தில் நிற்பது யார் என தெரியுமா? ..

மேற்கூறியவற்றில் எல்லாம் தொழிற் சங்கங்களின் பங்கு இல்லை என கூறமுடியுமா?…

இதில் எல்லாம் தொழிற்சங்கங்களின் பங்கு நிச்சயம் உண்டு, பல ஆயிரம் தொழிலாளர்களின் உயிர்த்தியாகம் உள்ளது. இன்று வேண்டுமானால் அரசியல் என்ற நோய் சில இடங்களில் புரையோடி போயிருக்கலாம், ஆனால் ஒவ்வொரு திட்டத்திலும் தொழிற்சங்கங்களின் பங்கையும், உண்மையான தொழிலாளர்களின் தியாகத்தையும் நாம் குறைவாக எடை போட்டு விட முடியாது.

எனவே தொழிலாளர் சொந்தங்களே  உங்கள் ஊரில் நடைபெறும் மேதின தொழிலாளர் பேரணி,  பொதுகூட்டத்தில் பங்கு பெறுங்கள், ஏனெனில்  மேதினம் ஒரு சம்பிரதாயமல்ல, அதுஒரு வரலாற்று நிகழ்வு…

ஆக்க கரு:- அலாவுதீன், மூத்த நிருபர்..

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!