இரவு நேரங்களில் குடிகாரர்களின் கூடாரமாகும் கடற்கரை….

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள கடற்கரையில் சில மாதங்களுக்கு முன்னர் பல லட்சம்; செலவு செய்து நடைபாதைகளும் இருக்கைகளும் நிறுவப்பட்டது. ஆனால் அவ்வாறு நிறுவப்பட்ட இடங்களில் போதிய வெளிச்சமும் காவல் துறையின் முறையான கண்காணிப்பும் இல்லாததால் சமூக விரோத செயல்களுக்கு வழிவகுக்கும் இடமாக மாறி வருகிறது. அங்கே பயினல்லாமல் கிடக்கும் ஹைமாஸ் விளக்கை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக நிறுவ கோரி பல சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாமமல் பயனற்று கிடக்கிறது.

ஆதிகாலை வேளைகளில் கடற்கரையில் நடைபயிற்சி செல்பவர்கள் முகம் சுழிக்கும் அளவுக்கு உடைந்த மதுபான பாட்டில்கள் சோடா பாட்டில்கள் தண்ணீர் பாக்கெட்டுகள் மற்றும் கழிவு பொருட்கள் என சிதறி கிடக்கிறது. சமீபத்தில் நிறுவப்பட்ட அமர்வு பெஞ்சும் மிகவும் அசுத்தப்படுத்தப்பட்டு காணப்படுகிறது.

பொதுமக்களின் நலன் கருதி காவல்துறையும் அரசு அதிகாரிகளும் இரவு நேரங்களில் கடற்கரை சாலைகைளில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவருடைய கோரிக்கையாகவும் உள்ளது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..