
இன்றைய நவீன உலகில் விஞ்ஞான வளர்ச்சியால் பல முன்னேற்றங்கள் இருந்தாலும், சில நேரங்களில் இந்த வளர்ச்சியே பல அசௌகரியங்களை ஏற்படுத்தி விடுகிறது. பல நேரங்களில் மக்கள் ஆர்வ மிகுதியால் உண்மைத் தன்மையை ஆராயாமல் சம்பங்களை பதிவிடுவதால் பல பேர் மிகவும் மன உளைச்சலுக்கும், சில நேரம் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு சென்று விடுகிறார்கள்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் சமூக வலைதளங்களில் பதியப்படும் தகவல்களை உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தவும், தவறான யூகத்தின் அடிப்படையில் பதியப்படும் செய்திகளை கட்டுப்படுத்தவும் கடுமையான சட்டங்களையும், அபராதங்களையும் விதிக்கின்றனர்.
புதிய சட்டத்தின் படி ஆதாராயமில்லாத செய்திகளை சமூக வலைதளங்களில் பதிந்தால் அமீரக திர்ஹம் ஒரு மில்லியன் (AED.1,000,000.00) வரை அபராதம் விதிக்கப்படும் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இத்தகவலை ஐக்கிய அரபு அமீகத்தில் தகவல்துறை ஒழுங்கு ஆணையம் (TRA) அறிவித்துள்ளது.
News Source: www.gulfnews.com