Home செய்திகள் தட்டச்சு பாடத்திட்டங்களில் மாற்றங்கள் அமுல்படுத்த வல்லுனர்கள் குழு அமைக்க வேண்டும்… வணிகவியல் பள்ளிகள் கோரிக்கை..

தட்டச்சு பாடத்திட்டங்களில் மாற்றங்கள் அமுல்படுத்த வல்லுனர்கள் குழு அமைக்க வேண்டும்… வணிகவியல் பள்ளிகள் கோரிக்கை..

by ஆசிரியர்

இராமேஸ்வரத்தில் தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்கத்தின் 49வது ஆண்டு பேரவை கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில்  கடந்த 7 ஆண்டு காலமாக நிலுவையில் உள்ள பரிந்துரைக்கப்பட்ட தட்டச்சுப் பாடத்திட்டங்களில் மாற்றங்களை அமுல்படுத்துவதற்கான வல்லுனர் குழு அமைக்க வேண்டும் போன்ற 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்கத்தின் 49வது ஆண்டு பேரவைக் கூட்டம்  மற்றும் கடந்த 2017, 18ம் ஆண்டுகளில் அரசு தேர்வில் மாநிலத்தில் முதலாவதாக வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா  இராமேஸ்வரம் கோசுவாமி மடம் டிரஸ்ட் மகாலில் நடந்தது.

இராமநாதபுரம் மன்னரும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நிர்வாகியுமான ராஜா என்.குமரன் சேதுபதி மற்றும் ராணி லட்சுமி குமரன் சேதுபதி ஆகியோர் தலைமை வகித்தனர்.  வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ராஜா பரிசு வழங்கி பாராட்டினார்.

முன்னதாக ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகி எல்ஐசி நாராயணன் வரவேற்று பேசினார். மாநில தலைவர் ரவிசந்திரன் முன்னிலை வகித்தார்.  மாநில செயலாளர் இளங்கோவன் 2017-18ம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை வாசித்தார். அதை தொடர்ந்து பொருளாளர் விஜயகுமார் வரவு செலவு கணக்கினை சமர்பித்து ஏகமனதான ஒப்புதலை பெற்றார். இந்நிகழ்ச்சிக்கு  தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பொதுக்கூட்டத்தில்  கடந்த 7 ஆண்டு காலமாக நிலுவையில் உள்ள பரிந்துரைக்கப்பட்ட தட்டச்சுப் பாடத்திட்டங்களில் மாற்றங்களை அமுல்படுத்துவதற்கான வல்லுநர் குழு அமைத்தல், ஆங்கிலம் மற்றும் தமிழ்தட்டச்சு புகுமுக இளநிலைத் தேர்வினை ஏனைய நிலைத் தேர்வுகள் போல் ஆகஸ்ட் பருவ தேர்வு மட்டுமல்லாது பிப்ரவரி பருவத் தேர்விலும் நடைபெற செய்ய வேண்டும்,  தட்டச்சு தனியார் பள்ளிகளை உடனடியாக மூடுவதற்கான நடவடிக்கையை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,  மாநிலத்தில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின் முழு விவரத்தினையும் தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் வலைதளத்தில் வெளியிட செய்ய வேண்டும்,  தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வாளர்கள் பட்டியலை சம்பந்தபட்டவர்களுடைந வரிசை எண் அளித்து உடனடியாக தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் வலைதளத்தில் வெளியிட செய்ய வேண்டும்,  தட்டச்சு பொறிகளின் உற்பத்தி இல்லாத நிலையில் அரசுத் துறைகளில் உபயோகிக்காமலுள்ள தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சுப் பொறிகளை மாணவர் நலன் கருதி தேவையுடையவர்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட 11 கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றித்தர வேண்டும் என கோரிக்கையாக தீர்மானம் பொதுக்கூட்டத்தில் இயற்றப்பட்டது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!