Home செய்திகள்கீழக்கரை செய்திகள் ஷஃபான் மாதமும் நாமும்..

இறையச்சம்இறைவனுக்கு அடிபணிதல்தியாகம்இரக்க சிந்தனைஎதையும் தாங்கும் மனப்பக்குவம்உளக்கட்டுப்பாடுதிடவுறுதிஏழை எளியோரின் கஷ்ட நிலை உணர்தல் போன்றவை பொதுவாக நோன்பு கற்றுத் தரும் மிகப் பெரும் பாடங்களாகும். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், நோன்பு ஒரு முஸ்லிமை பூரண மனிதனாக்குகிறது. ரமழான் மாத நோன்புஷவ்வால் மாத ஆறு நோன்புகள்வியாழன்திங்கள் ஆகிய வார நோன்புஆஷுராஅரஃபா மற்றும் ஷஃபான் மாத சுன்னத்தான நோன்புகள் மேற்கூறப்பட்ட உயரிய குறிக்கோள்களின் அடிப்படையில் எப்பொழுதும் வாழவே முஸ்லிம்களைப் பயிற்றுவிக்கின்றன. இத்தகைய நோன்புகளை பெறும்போதனைகளாக மட்டுமின்றி தமது வாழ்விலும் செயல்படுத்திக் காட்டியவர்கள் தான் காருண்ய நபி முஹம்மது (ஸல்) அவர்கள்.

இந்த வகையில் நபி (ஸல்) அவர்கள் ரமழானைத் தவிர ஏனைய மாதங்களில் கூடுதலாக நோன்பு நோற்ற ஒரு மாதமென்றால் அது ஷஃபான் மாதம் தான் என்பதை ஹதீஸ்களில் மூலம் நாம் காணலாம். இதன் மூலம் ஷஃபான் மாத நோன்பின் சிறப்பையும் அதன் மகத்துவத்தையும் விளங்கிக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் ரமழானைத் தவிர வேறு எந்த மாதத்திலும் பூரணமாக நோன்பு நோற்றதை நான் கண்டதில்லை. அவ்வாறே ஷஃபான் மாதத்திலே தவிர வேறு எந்த மாதங்களிலும் அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதையும் நான் பார்த்ததில்லை என அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரிமுஸ்லிம்). மற்றுமொரு அறிவிப்பில்நபி (ஸல்) அவர்கள் ஷஃபான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பவர்களாக இருந்தார்கள் என்று (முஸ்லிம்) நூலில் இடம்பெற்றுள்ளது.

ஷஃபான் மாதத்தில் நோன்பு நோற்பதால் அம்மாதம் நபி (ஸல்) அவர்களுக்கு மிக விருப்பத்திற்குரிய மாதங்களில் ஒன்றாக இருந்தது. மிகச் சில நாட்கள் தவிர மீதமுள்ள அனைத்து நாட்களிலும் அம்மாதத்தில் அவர்கள் நோன்பு நோற்பவர்களாகவே காணப்பட்டார்கள். எனினும்அவர்கள் அம்மாதம் முழுவதும் நோன்பு நோற்பார்கள். (நஸஈ).

ஷஃபான் மாதம் முழுவதும்அம்மாத்தின் அதிகமான நாட்களில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றார்கள் என வந்துள்ள மேற்கூறப்பட்ட ஹதீஸ்கள் ஒன்றுக்கொன்று முரண்பாடு போன்று வெளிப்படையாகத் தோன்றினாலும்அம்மாதத்தின் அனைத்து நாட்களிலும் நோன்பு நோற்காது அம்மாதத்தின் பெரும்பாலான நாட்களில் மாத்திரம் தான் நோற்றிருக்கின்றார்கள் என்பதை குறித்து ஹதீஸ்களை ஆழ்ந்து சிந்திக்கும் போது எவ்வித முரண்பாடுகளுமின்றி விளங்கிக் கொள்ளக் கூடியதாக உள்ளது. 

ஷஃபானில் அதிகம் நோன்பு நோற்கும்படி பணிக்கப்பட்டதன் ரகசியம் :

உஸாமா (ரலி) இந்த ரகசியம் பற்றி இவ்வாறு அறிவிக்கின்றார்கள் : “நான் நபி (ஸல்) அவர்களிடம்அல்லாஹ்வின் தூதரே! ஷஃபான் மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதைப் போன்று ஏனைய மாதங்களில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லையே! என்று கேட்டேன். அதற்கவர்கள்அது ரஜபுக்கும்ரமழானுக்குமிடையில் வரும் மாதமாகும். இம்மாதம் பற்றி மக்கள் கவனமின்மையாக இருக்கின்றார்கள். இம்மாதத்தில் அடியார்களுடைய அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்படுகின்றன. இம்மாதத்தில் நோன்புடன் இருக்கும் நிலையில் எனது அமலும் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்பட வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன் எனக் கூறினார்கள். (அபுதாவூத்நஸஈ,  ஸஹீஹ், இப்னு ஹுஸைமா).

மக்கள் அசிரத்தையாக காட்டும் ஷஃபான் மாதம் சிறப்பு வாய்ந்தது. அடியார்கள் செய்யக் கூடிய அமல்கள் அம்மாதத்தில் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்படுகிறது. அமல்கள் எடுத்துக் காட்டப்படும் பொழுதுநோன்பும் கூட இருந்தால் தன் சிறப்பு மென்மேலும் அதிகரிக்கிறது என மேற்படி ஹதீஸ் எமக்கு மிகத் தெளிவாக உணர்த்துகிறது. அதுமட்டுமின்றி ஷஃபான் மாத நோன்பு ரமழான் மாத நோன்பிற்கான சிறந்ததோர் பயிற்சியாகவும் அமைகிறது. இயல்பிலேயே திடீரென ஏற்படும் உடல்உள ரீதியான கஷ்டங்களைத் தாங்கிக் கொள்ளும் பக்குவம் மனித மனங்களுக்கு இல்லை. ஆனால் அதை முன்கூட்டியே ஒரு பயிற்சியாககக் கொண்டு வரும் போது சோர்வடையாது ஏற்றுக் கொள்ளும் பக்குவம் உண்டாகிறது. எனவே தன் பசி, தாகம், இச்சை போன்றவற்றை அடக்கி ரமழான் மாத நோன்பை கஷ்டமாகக் கருதாது இலகுவாக நோற்று விடுவான். இந்த வகையில் ஷஃபான் நோன்பு ரமழான் நோன்பிற்கான ஒரு பயிற்சியாகவே அமைகிறது.

ஷஃபான் மாதத்தில் எந்தளவு நோன்பு நோற்க முடியுமோ அந்தளது நோற்பது நபிவழியாக இருக்கிறது. மாறாக, 15 ம் நாள் தான் சிறப்பான நாள்அதுவே பராஅத் துடைய நாள்அன்று நோற்கும் நோன்பு மட்டுமே சிறப்பானது எனக் கூறுவது நபி (ஸல்) அவர்களின் வழிமுறைக்கு முரணானது.

பராஅத் இரவும்வணக்கங்களும் :

நபி (ஸல்) அவர்கள் அதிக அழுத்தம் கொடுத்துப் போதித்துச் சென்ற ஷஃபான் மாத நோன்புகள் இன்று புறக்கணிக்கப்பட்டுஅவர்கள் காட்டித் தராத பராஅத் நோன்பும்அதில் புரியப்படும் சில வணக்கங்களும் சுன்னாவின் பெயரால் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது வேதனை தருவதாகும்.

ஷஃபான் மாதத்தின் 15 ம் நாள் இரவே பராஅத் என்ற பெயரில் அழைக்கப்பட்டு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளுக்கு இப்படியொரு பெயரை அல்லாஹ்வோஅவனது தூதர் (ஸல்) அவர்களோ சூட்டியதற்கு சரியான சான்றெதுவும் இல்லை. அவ்விரவுக்குச் சிறப்பிருப்பதாகக் கருதிச் செய்யப்படும் தொழுகை பிரார்த்தனை போன்ற வணக்கங்கள் கண்ணியத்திற்குரிய இமாம்களாலும்இஸ்லாமிய அறிஞர்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன. அஷ்ஷெய்க் முஹம்மது அப்துஸ்ஸலாம் ஹிழ்ர் அஷ்ஷகைரி என்ற அறிஞர் தமது அஸ்ஸனன் வல்முப்ததஆத் அல்முதஅல்லகா பில் அத்காரி வஸ்ஸலாத் என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்கள்: 

ஷஃபான் மாதத்தின் 15 ஆம் நாள் இரவு வந்தால் அவ்விரவில் நீங்கள் நின்று வணங்கிபகலில் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள் (அல்ஹதீஸ்).

இப்னு அபீ பஸ்ரா என்பவர் இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறுவதால் இந்த ஹதீஸ் பலவீனமானதாகும். இமாம்களான அஹ்மத் (ரஹ்)இப்னு முஈன் (ரஹ்) ஆகியோர் இந்த இப்னு அபீ பஸ்ரா என்பவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டக் கூடியவர் எனக் கூறியுள்ளார்கள். மேலும் பராஅத் இரவுத் தொழுகை பற்றி வந்துள்ள ஹதீஸ் பாத்திலானது என இமாம் ஹாபிழ் அல் இராக்கீ (ரஹ்) தமது அல்மௌழுஆத் (இட்டுக்கட்டப்பட்டவைகள்) எனும் நூலில் குறிப்பிடுகின்றார்கள். ரஜப் மாதத்தில் மிஃராஜுக்கென உருவாக்கப்பட்ட தொழுகையும்ஷஃபானின் பராஅத் தொழுகையும் மிக மோசமானவெறுக்கத்தக்க இரு பித்அத்களாகும் என இமாம் நவவி (ரஹ்) அவர்களும் குறிப்பிடுகின்றார்கள்.

பராஅத் இரவு சிறப்பு வாய்ந்தது. அதில் கேட்கப்படும் பிரார்த்தனை மறுக்கப்படுவதில்லை எனக் கூறுவோர் தமது கருத்துக்கு பின்வரும் ஹதீஸை ஆதாரமாக முன் வைக்கின்றனர். 

ஐந்து இரவுகளில் கேட்கப்படும் பிரார்த்தனை மறுக்கப்படுவதில்லை. ரஜப் மாதத்தின் முதலாம் இரவுஷஃபான் மாதத்தின் 15 ம் இரவுஜும்ஆவின் இரவுஇரு பெருநாட்களின் இரவு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை நபி (ஸல்) அவர்கள் அருளியதாக அபூ உமாமா (ரலி) அவர்களின் மூலம் அபூ ஸயீத் பின்தார் என்பவரின் வாயிலாக இன்பு அஸாகீர் அவர்கள் தமது தரீகுத் திமஷ்க் எனும் நூலில் பதிவு செய்துள்ளார்கள். இதன் அறிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ள அபூ ஸஈத் பின்தார் என்பவரும் இப்றாஹீம் பின் அபீ யஹ்யா என்பவரும் பொய்யர்கள் என ஹதீஸ் கலை அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். இவ்வறிவிப்பு முஸ்னத் பிர்தௌஸ்,  பைஹகீ ஆகிய நூல்களில் இடம் பெற்றிருக்கின்றது. இதன் அனைத்துத் தொடரிலும் கோளாறுகள் காணப்படுவதாக ஹதீஸ்கலை அறிஞரும் பன்னூலாசிரியரும்,  ஷாபிஈ மத்ஹபின் பிரசித்தி பெற்ற இமாம்களில் ஒருவரான ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் விமர்சித்துள்ளார்கள். ஆகவேஇவ்வறிவிப்பு மறுக்கப்படக் கூடியதாகும்.

பராஅத் என்றொரு இரவு இல்லை. அதற்கு எவ்வித சிறப்புக்களுமில்லை என இவ்வளவு தெளிவுப்படுத்தப்பட்ட பின்னரும்அந்த இரவில் மஃரிபுக்கும் இஷாவுக்குமிடையில் ஸூரா யாஸீனை ஓத வேண்டுமெனவும்அவ்வாறு ஓதுவதால் ஆயள் நீளமாக்கப்படுகிறது, ரிஸ்க் விஸ்தீரணமாக்கப்படுகின்றது, பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன போன்ற பலவிதமான பயன்கள் கிடைக்கின்றன எனக் கூறுவது எவ்வளவு தவறானது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். 

மேற்கூறப்பட்ட பயன்கள் மூன்று விதமான உத்திரவாதங்கள் ஆகும். இத்தகைய உத்தரவாதங்களை அல்லாஹ்வோஅவனது தூதரோ தான் வழங்க முடியும். அவ்விருவரில் ஒருவர் வழங்குவதானால் அது அல்குர்ஆனிலோ அல் ஹதீஸிலோ இடம் பெற்றிருக்க வேண்டும். இந்த மூன்று யாஸீன் பற்றி அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் அறிவுறுத்தியதற்கு எந்தவித ஆதாரமுமில்லை. 

ஆயுளை நீடிப்பதும்ரிஸ்க்கை விஸ்தீரனமாக்குவதும்,பாவங்களை மன்னிப்பதும் அல்லாஹ் செய்ய வேண்டியவைகளாகும். அல்லாஹ்வுடைய அனுமதியின்றி இத்தகைய உத்திரவாதங்களை மனிதர்கள் வழங்குவது அல்லாஹ்வுடைய அதிகாரத்தில் தலையீடு செய்வது ஆகும். 

ஷவ்வால் ஆறு நோன்வுகள் நோற்பவன் அந்த வருடம் முழவதும் நோன்பு நோற்றவனைப் போலாவான். (முஸ்லிம்)

வியாழன்திங்கள் ஆகிய இரு தினங்களிலும் அடியார்களின் அமல்களை அல்லாஹ்விடம் காட்டப்பட வேண்டுமென நபியவர்கள் விரும்பினார்கள். (திர்மிதி)

ஆஸூரா நோன்பு நோற்பவனுக்கு கடந்த வருடம்எதிர்வரும் வருடம் (என இரண்டு வருடங்களில்) பாவங்கள் மன்னிக்கப்படும். (முஸ்லிம்).

இத்தகைய உத்தரவாதங்கள் கூறப்பட்ட நோன்புகளை எமது முஸ்லிம்களின் அதிகமானோர் அலட்சியம் செய்கின்றார்கள். ஆனால் சரியான சான்றுகளெதுவும் இல்லாத எந்த விதமான உத்தரவாதமும் கூறப்படாத பராஅத் நோன்பை நோற்க ஆர்வம் கொள்கின்றார்கள். இது கவலைப்பட வேண்டியதும், தவிர்க்கப்பட வேண்டிய விசயமுமாகும்.

எனவே, ஷஃபானின் 15 ஆம் நாளுக்கு தனிப்பட்ட சிறப்புகள் எதுவும் இல்லை என விளங்கி,  நாம் ஷஃபானில் கூடுதலாக நோன்புகள் நோற்று இறையன்பைப் பெறுவோமாக!

TS 7 Lungies

You may also like

1 comment

Abu Hala April 30, 2018 - 2:21 am

சகோதரரே இது எங்கள் கதை அல்ல.. நபி மொழிகளைத்தான் தொகுத்து வழங்கியுள்ளோம்.. இதில் எந்த நிர்ப்பந்தம் இல்லை..

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!