கீழக்கரை நகர் எஸ்.டி. பி.ஐ கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது..

கீழக்கரை நகர் SDPI கட்சி  சார்பாக 27-04-2018 அன்று  மாலை 7.00மணியளவில் மத்திய பா.ஜா.க ஆட்சியில் மக்களின் நிலை என்ற தலைப்பில் முஸ்லிம் பஜார் லெப்பை டீக்கடை அருகே  பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு நகர தலைவர் அஸ்ரஃப் தலைமை தாங்கினார்.  அதன் தொடர்ச்சியாக தொகுப்புரையை செயற்குழு உறுப்பினர் அஹமது நதீர், வரவேற்புரையை  நூருல் ஜமான் நகர் துணை தலைவர்(SDPI. கட்சி) ஆகியோரும் வழங்கினர்.
மேலும் இந்நிகழ்ச்சிக்கு நகர் செயலாளர் காதர், கிழக்கு  தெரு ஜமாத் துணை பொருளாளர். முஹம்மது அஜிகர், SDPI முன்னாள் தொகுதி துணை தலைவர் மூர்த்தி, மேற்கு கிளை தலைவர் ஹாஜா அலாவுதீன், மேற்கு கிளை துணை தலைவர் பஹ்ருதீன், கிழக்கு கிளை தலைவர் சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியின் கருத்துரையை நாம் தமிழர் கட்சி நகர செயலாளர் பிரபாகரன் மற்றும் SDPI நகர் துணை தலைவர் ஹமீது ஃபைசல் ஆகியோர்  வழங்கினார். பின்னர் வாழ்த்துரையை பாபுலர் ஃப்ரெண்ட் ஆப்_ந இந்தியா (PFI), மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிராஜ் வழங்கினார்.
இக்கூட்டத்தின் சிறப்புரையை SDPI கட்சி மாநில பொதுச் செயலாளர், அப்துல் ஹமீது வழங்கியதை தொடர்ந்து மக்கள் விரோத போக்கை கண்டிக்கும் விதமான தீர்மானங்கள், மதுக்கடைகளை மற்றும் கீழக்கரை நகர் சீர்கேடுகளை கண்டிக்கும் விதமான தீர்மானங்களை SDPI கட்சி தொகுதி துணைத் தலைவர் சித்திக் வாசித்தார்.
இந்நிகழ்ச்சியின் நிறைவாக நன்றியுரையை மேற்கு கிளை இணை செயலாளர் ஸஹித்  ஹசன் வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சமுதாய கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image

2 Comments

  1. ஒரு பொதுக்கூட்டத்துக்கு மொத்தம் 32 பேர் பொதுமக்கள் கலந்து கொண்ட கட்சியினை நமது SDPI கட்சி சாதனை செய்துள்ளது.

    • நீங்கள் மறைவாக முகத்தை காட்டாமல் அசிங்கமாக பதிவுகள் போட்டாலும், எங்களிடம் தவறு இருக்கும் பட்சத்தில் தவறை நீக்குவோம்,திருத்தி கொள்வோம்.. எங்கள் தவறுகளை அடையாளம் காண்பதற்காகவே எங்கள் செய்திகளை படித்து எங்கள் தவறை திருத்த உதவுமைக்கு உங்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

Comments are closed.