இராமநாதபுரம் சிஎஸ்ஐ கல்வியல் கல்லூரியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக ரத்த தான முகாம்..

இராமநாதபுரம் மாவட்டம் சிஎஸ்ஐ கல்வியல் கல்லூரியில் இன்று (28/04/2018) காலை 11 மணியளவில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக ரத்த தான முகாம் நடந்தது.
இந்த முகாமை டாக்டர் தேவமனோகரன் மார்டின் தலைமையில், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் ஹாருண் முன்னிலையில் சுமார் கல்லூரி மாணவ, மாணவியர்கள் 50-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினர்.  இம்முகாமில் செய்யது ஹமிதா கல்லூரியின் உதவி பேராசிரியர் மோகனமுருகன் 65 வது முறையாக ரத்ததானம் வழங்கினார்.
இதற்கு முன்னதாக கல்லூரி துணைமுதல்வர் ஆனந்த் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியை முனைவர் டோலாரோஸ்மேரி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக  செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி  பேராசிரியர் வள்ளிவிநாயகம், மாவட்ட ரத்ததான ஒருங்கிணைப்பாளர் ஐயப்பன், ரெட் கிராஸ் சொசைட்டியின் மாவட்ட செயலாளர் ராக்லாண்ட் மதுரம் விழா ஏற்பாட்டினை செய்திருந்தனர்.
நிகழ்ச்சியின் நிறைவாக  யூத் ரெட் கிராஸ் சொசைட்டி மாணவ பிரிவு ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் நன்றி கூறினார். மாணவ மாணவிகள் வழங்கிய ரத்தத்தை மாவட்ட தலைமை மருத்துவ மனையில் ரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் விநாயக மூர்த்தியின் தலைமையில் மாவட்ட ரத்த வங்கிக்கு எடுத்து செல்லப்பட்டது.

சத்திய பாதை மாத இதழ் ..

சத்திய பாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது… அசத்தியம் அழிந்தது..