கீழக்கரையில் தமிழக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் கொள்கை விளக்க பொதுகூட்டம்………..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அருகில் தமிழக மக்கள் எழுச்சி கழகம் சார்பாக கொள்கை விளக்க பொதுகூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டம் நகர் தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தின் வரவேற்புரையை அக்கட்சியின் நகர் செயலாளர் பெருமாள்  நிகழ்த்தினார்.
மேலும் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் இராஜேந்திரன் எழுச்சி உரை ஆற்ற, மாநில தலைவி அமுதா சுரேஷ், மாநில செயலாளர் பஷீர் அலி, மாநில பொருளாளர் ராணி வெள்ளத்துரை, மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவி இராஜேஸ்வரி, மாவட்ட தலைவர் முத்துகுமார் ஆகியோர் சிறப்பு பேருரை ஆற்றினர்.
இக்கூட்டத்தின் இறுதியாக நகர் இளைஞரணி தலைவர் அழகர் சாமி நன்றியுரையுடன் கொள்கை விளக்க பொதுகூட்டம் நிறைவு பெற்றது. இக்கூட்டத்தில்  ஏராளமான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டர்.

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..