வேதாளை காட்டான சேகு ஒலியுல்லா தர்ஹா கந்தூரி விழா..

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகேயுள்ள வேதாளையில் மஹான் காட்டான சேகு என்ற சேகு அப்துல் காதிர் ஒலியுல்லாஹ் தர்ஹாவில் கந்தூரி விழா நடைபெற்றது.
கடந்த 17/04/2018 அன்று மாலை கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. பின்னர் தினம் மவ்லிது ஓதப்பட்டு,  விழா நாளான இன்றும் தர்ஹாவில் மவ்லிது ஓதப்பட்டது.  சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கனக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு நேர்த்தி கடனாக தென்னங்கன்று செலுத்தினர்.
மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நடைபெற்று வரும் இந்த விழாவில் இந்து முஸ்லீம் மக்கள் சகோதரத்துவத்துடன் கலந்து கொண்டனர்.

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..