தொடரும் பாலியல் தொல்லை..ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது..

திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வந்த திருவனந்தபுரம் விரைவு ரயிலில் சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்தவர்கள் 10 பேர் குடும்பத்துடன்  பயணித்தனர். இவர்கள் பயணித்த அதே முன்பதிவு பெட்டியில் சென்னை பெசன்ட்நகரைச் சேர்ந்த 57 வயது வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் என்பவரும் கோவையில் ஏறியுள்ளார்.
ரயிலில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது, சென்னை பயணிகளுடன் வந்த 9 வயது சிறுமியிடம் பிரேம் ஆனந்த் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த உறவினர்கள் பிரேம் ஆனந்தை பிடித்து ரயில்வே பரிசோதகரிடம் ஒப்படைத்தனர்.
ஈரோடு ரயில் நிலையத்தில் பிரேம் ஆனந்தை கைது செய்த ரயில்வே போலீஸார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.