கீழக்கரையில் மார்க்சிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்…

கீழக்கரையில் மார்க்சிஸ்ட் கட்சியின்  தாலுகா குழு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இன்று  (22/04/2018) இந்து பஜார் பகுதியில்  நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்பாட்டத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 8வயது சிறுமி ஆசிபாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரியும்,  அருப்புக்கோட்டை கல்லூரியில் மாணவிகளை தவறான பாதைக்கு தூண்டிய பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கில் தொடர்பு உடையவர்கள் அனைவர் மீதும் பாரபட்ச்சம் இல்லாமல்   விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்திற்கு தாலுகா குழு செயலாளர் தலைமை தாங்கினார். கண்டன சிறப்புரையை செயற்குழு உறுப்பினர்கள் இராஜவேல் மற்றும் குருவேல் வழங்கினர். மேலும் பல தாலுகா குழு உறுப்பினர்கள் மற்றும் பல  இணை செயலாளர்களும் கலந்து கொண்டனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.