கீழக்கரை ‘ஸ்பைஸி ஹலால்’ நிறுவனத்தின் சுவைமிகு தயாரிப்புகள் – சமைக்க வேண்டாம்.. அப்படியே சாப்பிடலாம் (கீழை டைரி -12 – ஒரு வீடியோ தொகுப்புடன்..)

கீழக்கரை புதுத்தெருவை சேர்ந்த சகோதரர்கள் முகம்மது சஹீது, சித்திக் இபுறாகீம்ஃபவுசுல் அலியுர் ரஹ்மான் ஒன்றிணைந்து ‘ஸ்பைஸி ஹலால்’ என்கிற பெயரில் துணை உணவு தயாரிப்பு நிறுவனத்தினை துவங்கி சிறப்பாக செய்து வருகின்றனர். உள்ளூரில் தரமான மூலப் பொருள்களுடன், கை தேர்ந்த சமையல் கலைஞர்களின் கண்காணிப்பில், பக்குவமாக தயாரிக்கப்படும் மாசிப் பொரியல், இறால் பொரியல், நெத்திலி பொரியல், சென்னா கூனி பொரியல் உள்ளிட்ட அசத்தும் பொரியல் வகையறாக்களை வாங்கி ருசிக்கும் ‘ஸ்பைசி ஹலால்’ பிரியர்கள், இந்த பொரியல் வகைகள் தங்கள் சாப்பாட்டு தட்டில் இல்லாமல் மதிய உணவினை சாப்பிடுவதே இல்லை.

அது போல் கடல் தாண்டி வளைகுடா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் ‘ஸ்பைசி ஹலால்’ பிரியர்கள் தங்களோடு இந்த நாவிற்கினிய பொரியல் வகையறாக்களுக்கும் சேர்த்து விமான டிக்கெட்டு எடுத்து விடுகின்றனர். ‘ஸ்பைசி ஹலால்’ நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் வாடிக்கையாளர்கள் ருசிப்பதற்கு இலகுவாக தயார் நிலையில் இருப்பதால் மீண்டும் சமைக்க வேண்டியதில்லை. அப்படியே சாப்பிடுவதற்கு ஏதுவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரமலான் நோன்பு காலங்களில் இஸ்லாமிய மக்களால் பெரிதும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

கீழக்கரை தொதல், பணியம், ஓட்டுமா, கலகலா வரிசையில் இப்போது ‘ஸ்பைஸி ஹலால்’ உணவு தயாரிப்புகளும் பிரபலமாகி வருகிறது. வெளி நாடுகளில் வசிக்கும் நம் கீழக்கரைவாசிகள், ஒவ்வொரு முறை விடுமுறையில் வரும் போதும், இந்த ஸ்பைஸி ஹலால் உணவு வகைகளை வாங்கி சென்று தங்களுடன் பணி செய்யும் நண்பர்களுக்கு பரிசளிப்பது வழக்கமாகி வருகிறது.

இது மட்டுமல்லாமல் சுத்தம் செய்யப்பட்ட மாசித் தூள், இறால் கருவாடு, நெத்திலி கருவாடு, சென்னா கூனி கருவாடு உள்ளிட்ட தித்திக்கும் துணை உணவு வகை தயாரிப்புகளும் இங்கு கிடைக்கிறது. தற்போது கீழக்கரை, இராமநாதபுரம் நகரின் சிறப்பங்காடிகள் மட்டுமல்லாது தமிழகமெங்கும் இந்த ‘ஸ்பைஸி ஹலால்’ உணவு வகைகள் அனைத்து கடைகளிலும் முக்கிய இடத்தை பிடித்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. அதே போல் திருவனந்தபுரம், நாகர்கோயில், திருநெல்வேலி, பாண்டிச்சேரி, கோயம்பத்தூர் நகரங்களில் இருக்கும் போத்தீஸ் சூப்பர் ஸ்டார் சிறப்பங்காடிகளிலும் இந்த ‘ஸ்பைஸி ஹலால்’ உணவு தயாரிப்புகள் கிடைக்கிறது.

இது குறித்து ‘ஸ்பைஸி ஹலால்’ நிறுவனர்களில் ஒருவரான பவுசுல் அலியுர் ரஹ்மான் கூறுகையில் ”இறைவனுடைய அருளால் எங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகள் கடல் கடந்து அனைவராலும் நேசிக்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக ஸ்பைசி ஹலாலின் பொருட்கள் மட்டுமே பெரும்பாலோருக்குத் தெரியும், முதன் முதலாக ஸ்பைசி ஹலாலின் உரிமையாளர்களையும் இவ்வுலகுக்கு கீழை நீயூஸ் டி.வி மூலம் அறிமுகப்படுத்திய அல்லாஹுக்கே எல்லாப் புகழும். கீழை நீயூஸ் டி.விக்கு எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். வாடிக்கையாளர்கள் உங்கள் மேலான ஆதரவை தொடர்ந்து எங்கள் நிறுவனத்திற்கு தர வேண்டும்.” என்று தெரிவித்தார்.

‘ஸ்பைஸி ஹலால்’ நிறுவனத்தாரின் வியாபாரம் செழிக்க கீழை நியூஸ் வலைத்தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..