இராமநாதபுரம் மாவட்டம் கண்ணாடி வாப்பா பள்ளி ஆண்டு விழா மற்றும் மழலையர் பட்டமளிப்பு விழா..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செல்லும் வழியில் அமைந்துள்ள கண்ணாடி வாப்பா சர்வதேச பள்ளியில் ஆண்டு விழா மற்றும் மழலையருக்கான பட்டமளிப்பு விழா பள்ளி வளாகத்தில் கடந்த  வெள்ளிக்கிழமை (20/04/2018) மாலை 04.00 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கீழக்கரை தாசீம் பீவி கல்லூரி முதல்வர் சுமையா தாவூத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.  பின்னர் அவருடைய சமூக சேவையை பாராட்டி பள்ளி நிர்வாகம் சார்பாக சமூக சேவகருக்கான விருது வழங்கப்பட்டது.
பின்னர் அதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தும் விதமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  பின்னர் பள்ளி முதல்வரின் சிறப்புரையுடன் மாணவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..