இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் இன்று முதல் தனியார் பள்ளியில் விண்ணப்பிக்க அழைப்பு

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகள், எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பில், 25 சதவீத இடங்களில், கல்வி கட்டணமின்றி, மாணவர்களை சேர்க்க வேண்டும். இந்த மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த 2017 ஆம் ஆண்டு முதல், ‘ஆன்லைன்’ முறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு, இன்று துவங்கியுள்ளது. தங்கள் பிள்ளைகளை இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் பிரகாரம் தனியார் பள்ளிகளில் சேர்க்க மே, 18க்குள் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். மாணவர்களின் பெற்றோர், அரசு தேர்வுத் துறையின், http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தங்கள் விபரங்களை பதிவு செய்ய, வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் கிராமப்புற மாணவர்களுக்கு, அந்தந்த பகுதி தனியார் பள்ளிகள், வட்டார வள மையங்கள், கல்வித் துறை அலுவலகங்களில், விண்ணப்பம் பதிவு செய்யும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது என, பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை, தனியார் பள்ளிகளில் எவ்வித கட்டணமும் இல்லாமல் வகுப்பில் சேர்க்க கீழ் வரும் தமிழக அரசின் பள்ளி கல்வித் துறை மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் இணைய தளத்தில் விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்.

http://tnmatricschools.com/rte/rtehome.aspx

http://tnmatricschools.com/rte/rtehome.aspx

 

புனித ரமலான் வாழ்த்துக்கள்..