அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் சுவைக்கு தலைமையாக கோலகலமாக திறக்கப்பட்ட “FOUR STAR RESTAURANT”..

ஐக்கிய அரபு அமீரகம் அனேகமான இந்தியர்களுக்கு சொந்த நாடு போல் தான்.  அந்த அளவுக்கு நம் நாட்டு மக்கள் வாழ்நாளில் அதிகமான நாட்களை அங்கு செலவிட்டு வருகிறார்கள்.
எத்தனை வளங்களும், செல்வங்களும் இருந்தாலும் வாயின் சுவைக்கேற்ப ருசியான வீட்டு சுவையில் உணவு கிடைத்தால் அதுவே மிக்க மகிழ்ச்சியாகும்.
அந்த சுவையான உணவை வழங்கும் விதமாக கீழக்கரையை சார்ந்த இளைஞர்கள் “FOUR STAR RESTAURANT” என்ற தமிழ் உணவுகளை வழங்க அபுதாபி முஷஃபா பகுதியில் இன்று (20/04/2018) வெள்ளிக்கிழமை கோலகலமாக திறக்கப்பட்டது.
 
இந்த உணவகத்தின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், “ எங்களுடைய உணவகத்தில், நிறுவனத்தின் பெயருக்கேற்ப தமிழகத்தில் நான்கு திசையிலும் கிடைக்கும் அனைத்து வகையான உணவுகளும் இங்கு ஒரே இடத்தில், அனுபவமிக்க சமையல் மாஸ்டர்களை வைத்து தயாரிக்க பட உள்ளது” என்றார்.
இந்த புதிய நிறுவனம் வெற்றி பெற கீழை நியூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது.

To Download Keelainews Android Application – Click on the Image