இவள் ‘அவள்’ இல்லையா?? – ஒரு கண்டன பதிவு..

நிர்பயா,  இந்தப் பெயரை இன்று வரை யாரும் மறந்திருக்க முடியாது. கடந்த டிசம்பர் 16,  2012 அன்று  இரவு நேரத்தில் ஆண் நண்பருடன் நகரில் வலம் வந்த பொழுதுஅரசு வாகன ஓட்டுநர் மற்றும் நண்பர்கள் 6நபர்களால் பலாத்காரம் செய்து சாலையில் வீசிய பொழுது சாமனிய பெண் முதல் இந்தியாவின் பெண் மந்திரிகள் வரை தெருவில் இறங்கி பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக ஓங்கி குரல் கொடுத்தனர்.  பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கும் வரை இந்தியா முழுவதும் போராட்டங்கள் வெடித்தது. அனைத்து ஊடகங்களும் இந்த வழக்கைப் பற்றி அக்கு வேராக,  ஆணி வேராக மேடை போட்டு ஆராய்ந்தார்கள். பல வருடங்கள் ஆகியும் செய்யா குற்றத்திற்கு தண்டனை அனுபவித்து வரும் இந்திய தேசத்தில் துரிதமாக அனைவரும் ஆச்சரிய்படும் வகையில் குற்றவாளகள் அனைவரும் நிர்பயா வழக்கில் தண்டிக்கப்பட்டனர். இஸ்லாத்தை எதிர்த்தவர்கள் கூட இந்தக் குற்றத்திற்கு இஸ்லாம் முறைப்படி தண்டனை வழங்க வேண்டும் என்று வக்காலத்து வாங்கினார்கள். இந்த வழக்கிற்கு விரைந்து தீர்ப்ப வழங்கிய பொழுது இந்திய நாடே சுதந்திரம் அடைந்தது போல் ஒரு ஆர்ப்பரிப்பு உருவானது.

இன்று ஆசிஃபா எனும் எட்டு வயது நிரம்பி சிறுமியை சிறுபான்மையினருக்கு தங்கள் இனத்தின் மேல் மன ரீதியான பயத்தை உண்டாக்க வேண்டும் எண்ணத்தில் சிறுவன் முதல்,  கோயில் நிர்வாகி மற்றும் போலீஸ் அதிகாரி உட்பட நான்கு பேர் பல நாட்கள் கோயிலுக்குள் வைத்து சித்திவதை செய்துவன்புணர்வு செய்து கொலை செய்து வீதியில் வீசி எறிந்துள்ளார்கள். அத்தோடு நிற்காமல் அக்குடும்பத்தையே ஊர் விலகல் செய்து வைத்துள்ளார்கள்.

இது நடந்தது ஜனவரி மாதம் 8ம் தேதி,  ஆனால் இந்த செய்தி வெளிச்சத்திற்கு வந்த பொழுது ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர் முதல் உள்ளர் அரசியல்வாதி வரை எந்த வித ஆட்சேபனை தெரிவிக்கவில்லை மாறாக அந்த சிறுபிஞ்சின் மீதும் அக்குடும்பத்தார் மீது அவதூறை வீசினார்கள்.  குற்றம் சாட்டப்பட்டார்களுக்கு எதிராக ஆளும் கட்சி பாரதிய ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர், தொலைகாட்சியில் குற்றவாளிகளுக்கு ஆதரவளிக்கும் ஈன செயல்களிலும் ஈடுபட்டனர்.  ஏன்??.  ஏனென்றால் அக்குடும்பத்தினர் அவ்வூரில் வாழும் தாழ்த்தப்பட இனத்தைச் சார்ந்தவர்கள். இந்த வழக்கில் அரசியல் வாதி முதல் போலிஸ் அதிகாரி வரை பல லட்சங்களுக்கு விலை போய் உள்ளார்கள்.  இந்தப் பிஞ்சு உள்ளத்திற்காக இன்று வரை பல பெண் மத்திய அமைச்சர்களை கொண்ட மத்தியில் யாரும் வாய் திறக்கவில்லை,  சட்டைக்கும், பாவாடைக்கும் எதிர்ப்புக் குரல் கொடுக்கும் மாதர் சங்கம் இது வரை சிறு மூச்சு விடவில்லை.  அபயா வழக்கிற்கு வீதியில் இறங்கிய நடிகர், நடிகைகள்  கூட்டம் இதுவரை எந்த நீலிக் கண்ணீரும் வடிக்கவில்லை.

 ஏனென்றால் இவள் அவாள் இல்லை…

சத்திய பாதை மாத இதழ் ..

சத்திய பாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது… அசத்தியம் அழிந்தது..