தவ்ஹீத் ஜமா அத் சார்பாக முக்குரோடு பகுதியில் மோர் பந்தல்…

கீழக்கரை முக்குரோடு பகுதியில் இன்று (14/04/2018) காலை முதல் தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளை சார்பாக பொதுமக்களுக்கு மோர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அப்பகுதியில் இருந்து ஏர்வாடி, இராமநாதபுரம் வழியாக வெளியூர் செல்ல  காத்திருப்பவர்களுக்கும்,  அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களுக்கும் மோர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.