Home செய்திகள் கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் பணிநியமன ஆணை மற்றும் கல்வியில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா…

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் பணிநியமன ஆணை மற்றும் கல்வியில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா…

by ஆசிரியர்
கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியும், இந்திய தொழில்நுட்பக்கழக மாணவர் கூட்டமைப்பும் இணைந்து பணிநியமன ஆணை மற்றும் கல்வியில் சிறந்து விளங்கிய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர் அப்பாஸ் மைதீன் தலைமையிலும்,  கல்லூரி டீன் முனைவர். முஹம்மது ஜஹாபர்,   செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ரஜபுதீன், முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன்  முன்னிலையிலும் நடைபெற்றது.
கல்லூரி துணை முதல்வர் முனைவர். ஆழகிய மீனாள் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக இராமநாதபுரம் மண்டல DIG காமினி கலந்து கொண்டு, மாணவர்களாகிய நீங்கள் படிக்கும் பொழுதே சக மாணவர்களுடன் தங்களது அறிவுத்திறனை பகிர்ந்து,  அதன் மூலம் தங்களது திறமைகளை வளர்த்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி உங்களை பெற்ற தாய்,  தந்தையருக்கு பெருமை சேர்க்குமாறு அறிவுரை வழங்கினார்.
முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி 2017-18 ஆம் ஆண்டின் வேலைவாய்ப்பு சிறப்பு விழா மலரை கல்லூரி முதல்வர் வெளியிட சிறப்பு விருந்தினர் பெற்றுக்கொண்டார். பணிநியமன ஆணை வழங்கும் விழாவில் 357 மாணவர்களுக்கு (K.L.R Global INC, Dynamic Technologies, Wipro, Nissan Motor Corporation,Intelnet, Om Innovation, Berezia Technology, Magus customer dialog, Team Lease)  கம்பெனிகளின் பணிநியமன ஆணையினை சிறப்பு விருந்தினர் வழங்கினார்.
அண்ணா பல்பலைக்கழக தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கும், கல்லூரியின் ஒவ்வொரு துறையிலும் உள்ள 234 பாடப்பிரிவிலும் சிறந்த மதிப்பெண் பெற்ற 1002 மாணவர்கள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளக்கிய 183 மாணவர்களுக்கும்,  ஒவ்வொரு துறையிலும் உள்ள பாடப்பிரிவுகளில் அதிக தேர்ச்சி விகிதம் பெற்று தந்த ஆசிரியர்களுக்கும் சிறப்பு விருந்தினர் இராமநாதபுரம் மாவட்ட DIG காமினி அவர்களால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. கல்லூரி தகவல் தொழில்நுட்ப துறைத் தலைவர் விஜயராஜ் நன்றியுரை வழங்கினார்.
​விழாவிற்கான ஏற்பாடுகளை அனைத்து துறை தலைவர்களும்,  இந்திய தொழில்நுட்பக்கழக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சதீஸ்குமார்,  வேலைவாய்ப்பு அதிகாரி சாகுல் ஹமீது  மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் நஜ்முதீன் ஆகியோர் செய்திருந்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!