மீன்பிடி தடை காலம் நாளை (15/04/2018) தொடக்கம்.. மீனவர்கள் கோரிக்கை இந்த வருடம் நிறைவேறுமா??

மீன்வளத்தை பாதுகாக்க வருடந்தோறும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் மே மாதம் இறுதிவரை தமிழக கடல் பகுதியில் விசைப்படகுகள் மூலம் மீன் பிடிக்க தடை விதிக்கப்படும். அதன்படி இந்த ஆண்டு மீன்பிடி தடை காலம் நாளை முதல் தொடங்குகிறது.

இதன் காரணமாக ராமேசுவரம் மண்டபம், தங்கச்சிமடம், பாம்பன் ஆகிய பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்படும்.

மீன்பிடி தடை காலம் தொடங்கியுள்ளதால், கடலோர மாவட்டமான கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் பாதிக்கப்படுவர். இவர்களில் பலர் கூலி வேலைக்கு செல்வர்.

இன்னும் பலர் விசைப்படகுகளை பழுது பார்க்கவும், வர்ணம் அடிக்கவும், மின் மோட்டார்கள், வலைகள், மீன்பிடி சாதனங்களை சரி செய்யவும் மீனவர்கள் மீன்பிடி தடை காலத்தை பயன்படுத்திக் கொள்வார்கள்.

மீன்பிடி தடை காலத்தில் மீனவர்கள் வாழ் வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு வழங்கும் நிவாரண தொகை இந்த வருடம் உயர்த்தபடும் என ஆவலுடன் உள்ளனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.