சவுதி அரேபியா தம்மாம் மாநகரில் கீழக்கரை மக்கள் சங்கமம்..

நேற்று வெள்ளிக்கிழமை பகல் சவூதி அரேபியா தம்மாம் மாநகரில் கீழக்கரை மக்கள் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் கீழக்கரையை சார்ந்த 50க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என கலந்து கொண்டனர்.

குழந்தைகளுக்கான அறிவுத்திறன் போட்டிகளை பிரபுக்கள் தெரு ஃபுர்கான் நடத்தி பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தம்மாம் சோஷியல் ஃபோரத்தின் ரூரல் ஏரியா தலைவர் ரமீஸ்தீன்,சோஷியல் ஃபோரத்தின் முன்னாள் மத்திய துணை தலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி ஆகியோர் கலந்து கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தலின் அவசியம் குறித்து உரையாடினர்.

நிகழ்ச்சியில் மிகவும் ஆர்வமாக  கௌபத் அலி, அப்துல்  கரீம், சபீக் ரஹ்மான், தமீம்,நாசர், அன்சாரி  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அஸாருதீன் வாஜிது அலி, ஃபயர் பைசல், சோஷியல் ஃபோரம் தம்மாம் பிரிவின் நிர்வாக குழு உறுப்பினர் சதுருதீன், ஜாஹிர் ஹுசைன், நசீர் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

முடிவில் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய பாஜக அரசை வலியுறுத்தும் பதாகையை ஏந்தி தமிழக விவசாயிகளின் துயர் நீங்கிட குரல் எழுப்பினர்.

தகவல்:கீழை ஜஹாங்கீர் அரூஸி.