பாம்பன் சாலை பாலத்தில் அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதல் 14 பேர் காயம்..

பாம்பன் சாலை பாலத்தில் நிகழ்ந்த விபத்தில் 14பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி.


இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் சாலை பாலத்தில்  மதுரையில் இருந்து பயணிகளுடன் அரசு பேருந்து இராமேஸ்வரம் நோக்கி வந்து கொண்டிருந்தது, அதே போல் இராமேஸ்வரத்திலிருந்து பயணிகளுடன் தனியார் பேருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில் பாம்பன் பாலத்தின் அருகேயுள்ள மண்டபம் கடற்கரை பூங்காவிற்கு அருகே சென்று கொண்டிருக்கும் போது  தனியார் பேருந்தும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேருக்கு பலத்த காயமும், 12 பேருக்கு லேசான காயமும் ஏற்ப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மண்டபம் போலிசார் விபத்துகுறித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் விபத்தில் காயமடைந்தவர்களை அவசர ஊர்தி மூலம் இராமநாதபுரம் அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் பாம்பன் பகுதியில் இன்று பெய்த மழையின் காரணமாக இரண்டு பேருந்தின் ப்ரேக் பிடிக்காததால் ஓட்டுநரின் கட்டுபாட்டு இழந்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். பாம்பன் பாலத்தில் மின்விளக்குகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை ஒரு சில மின் விளக்குகளை தவிர பெரும்பான்மையான எரிவதில்லை, விபத்து நடந்த இன்று விளக்குகள் இல்லாததும் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.