பொய் வழக்கில் சிக்கவைக்கப்பட்ட ஐந்து செய்தியாளர்களை நீதிமன்றம் விடுதலை செய்தது!

தமிழகத்தில் உள்ள பல்வேறு சீனியர் ரிப்போர்ட்டர்களில் ம.பா.கெஜராஜ் என்பவரும் ஒருவர். இவர் கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் பத்திரிகையாளராக உள்ளார். அவற்றில் வேலூர் நாரதர், தந்தை பெரியாரை நிறுவனராகக்கொண்ட விடுதலை நாளேடு, பத்திரிகை துறையின் ஜாம்பாவான் ஷ்யாம் நடத்தி வந்த தராசு வார இதழ், ஆகியவற்றில் வேலூர் மாவட்ட செய்தியாளராகவும், குமுதம் ரிப்போர்டடர் இதழின் சீனியர் நிருபராக கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்ட செய்திகளையும் சேகரித்து எழுதி வந்தார்.

இந்நிலையில் 27.06.2010 தேதியிட்ட அந்த இதழில் வேலூர் மாவட்டத்தில் நிலவிய சமூக விரோத செயல்கள் குறித்த செய்தியை ஆதாரத்தோடு எழுதினார். அதன் தொடர்ச்சியாக பல முக்கிய போலிஸ் அதிகாரிகளை தமிழக அரசு இடமாற்றம் செய்தது. இதனால் ஆத்திரம் அடைந்த சிலர் போலி நிருபர்கள் சிலரை வைத்து பல்வேறு விதமான பொய் புகார்களை ஆங்காங்கே அளித்தனர்.

மேலும் மத்திய அரசின் அங்கமான ஆர்.என்.ஐ. யால் தடை செய்யப்பட்ட இதழ்கள் மற்றும் சன் தொலைக்காட்சி பத்திரிகையாளர் ஆகியோர் ம.பா.கெஜரஜ் குறித்து பொய்யான செய்தியை வெளியிட்டனர். எனவே கெஜராஜ் நீதிமன்றத்தின் உதவியை நாடினார். அதன் பின்னர்தான் மேற்படி கெஜராஜ் உட்பட ஐந்து செய்தியாளர்கள் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலிசார் பொய் வழக்கு பதிந்தனர்.

இது தொடர்பான வழக்கு வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் நடந்து வந்த நிலையில் 12.04.2018 அன்று, மேற்படி நீதிமன்றத்தின் மாஜிஸ்திரேட்டு திருமதி. அலிசியா அவர்கள் ஐந்து பேரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

மேலும் உண்மையான செய்தியாளர்களின் பத்திரிகை சுதந்திரத்தை காத்திடும் வகையிலும், போலி நிருபர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக இவ்வழக்கில் செயல்பட்ட சில காவல் அதிகாரிகள் மீதும் சட்ட நடவடிக்கை கோர உத்தேசிக்கப்பட்டிருக்கிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.