இராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை கோவிலுக்கு சொந்தமான சொத்துகளை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பது குறித்து ஆய்வுக் கூட்டம்..

இராமநாதபுரம் மாவட்டத்தில் வீரபத்ர சுவாமி கோவிலுக்கு சொந்தமான சுமார் 134 கோடி மதிப்புள்ள சொத்துகளை மீட்பது குறித்து தாசில்தார் சிவக்குமார் தலைமையிலான ஆய்வுக் கூட்டம் நடந்தது. சென்னை திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் இராதாகிருஷ்ணன் தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் பல கோடி மதிப்புள்ள சொத்துகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இன்று இராமநாதபுரம் மாவட்டம் & தாலுகா மற்றும் நகர் பகுதிகளில் சக்கரக்கோட்டை கிராமத்தில் உள்ள வீரபத்திர சுவாமிகள் கோவிலுக்கு சொந்தமான சுமார் ரூ.1 34 கோடி மதிப்புள்ள 2.90 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு பிடியில் சிக்கியுள்ளதை மீட்பதற்காக நேரடியாக சம்மந்தப்பட்ட இடத்திற்கு பார்வையிட வந்தார். அவருடன் இந்து அறநிலை துறையின் ஆய்வாளர்கள் சுந்தரேசுவரி , கர்ணன் இராமநாதபுரம் தாலுகா தாசில்தார் சிவக்குமார், கோவில் நில தாசில்தார் சிவக்குமார், உதவி பொறியாளர் இரவிச்சந்திரன், மாவட்ட பத்திர பதிவாளர் கல்யாணி, நகராட்சி கமிஷனர் பார்தசாரதி, துணை தாசில்தார் முருகவேல், இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் இடங்களை பார்வையிட்டு நில அளவை செய்தனர்.

பின் இராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் 134 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை மீட்பது குறித்து ஆய்வுக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் நில மோசடி நடந்ததா என்பது குறித்து விவாதித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்யப்பட்டது. கூட்டம் முடிந்து வெளியே வந்து நிறுனர் இராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் ஆக்கிரப்பு செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து சொத்துகள் மீட்கப்படும் என்று தெரிவித்தார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..