Home செய்திகள் செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி 18வது ஆண்டு விழா..

செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி 18வது ஆண்டு விழா..

by ஆசிரியர்

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 07.04.2018 அன்று காலை 10.30 மணியளவில் 18-வது ஆண்டுவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் ரஜபுதீன் தலைமையேற்று ஆண்டறிக்கை வாசித்தார்.

சிறப்பு விருந்தினர்கள் இராமநாதபுரம் மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் வெள்ளைத்துரை மற்றும் இராமநாதபுரம் கல்வியியல் கல்லூரி மற்றும் புனித ஆந்திரேயா பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தாளாளரும் மற்றும் மதுரை, இராமநாதபுர மறைமாவட்ட திருமண்டில சட்ட ஆலோசகருமான P. மனோகரன் மார்ட்டின் ஆகியோர் கலந்து கொண்டனர். P. மனோகரன் மார்ட்டின் அவர்கள் பேசுகையில் “உலகம் முள்நிறைந்த பாதையாக உள்ளது. மாணவர்கள் இந்த சோதனைகளை சந்தித்து அதில் வெற்றிபெற முயலவேண்டும். இதற்கு மாணவர்கள் தங்களுடைய அறிவை தானே வளர்த்துக் கொண்டு வாழ்வில் வெற்றிபெற வேண்டும். இவ்வுலகம் நன்மை தீமை அனைத்தும் கலந்த கலவையாகும். மாணவர்கள் அன்னப்பறவையினைப் போன்று நன்மையை மட்டும் உட்கொண்டு தீமையை ஒழிக்க வேண்டும் என்றார். மேலும் முயற்சியின்மையே தோல்விக்கு அடிகோலாகும் என்றார்”.

பின்னர் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் வெள்ளைத்துரை, மாணவர்கள் அனைவரும் நற்பண்புகளைப் பெற்று சமூகத்தில் சிறந்த சான்றோர்களாக திகழவேண்டும். எந்த சூழ்நிலையிலும் மாணவர்கள் தங்களுடைய தன்னம்பிக்கையும், மரியாதையையும் இழக்கக் கூடாது. ஓவ்வொருவர்க்கும் தங்களுடைய வாழ்நாட்களில் நற்சந்தர்ப்பம் கிடைக்கும். அதனைச் சரியாக பயன்படுத்தி தங்களது வாழ்வியலை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் கல்லூரியில் படித்து முடித்துச் செல்லும் மாணவர்கள் படிப்பில் வெற்றி பெற்றேன் எனக் கூறுவதைவிட நற்பண்புகளைக் கற்றுக் கொண்டேன் என்பதே பெருமையாகும். இதுவே தங்களுக்குக் கற்றுத்தந்த கல்லூரிக்குப் பெருமை” என்றார்.

இந்நிகழ்ச்சியில் முகம்மது சதக் பொறியியல் கல்லூரி நெறியாளர் முகம்மது ஜஹபர், முதல்வர் அப்பாஸ் முகைதீன் மற்றும் முகம்மது சதக் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். இவ்விழாவின் முன்னதாக முதுகலை வணிகவியல் துறைத்தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும்ää சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இறுதியாக வேதியியல் துறைத்தலைவர் அப்துல் சர்தார் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை நுண்ணுயிரியல் துறைத்தலைவர் ஆனந்த், முதுகலை ஆங்கிலத் துறைத்தலைவர் நெல்சன் டேனியல், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் சுலைமான், ராஜமாணிக்கம் மற்றும் எஸ்தர் கண்மணி ஆகியோர் செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு முகம்மது சதக் அறக்கட்டளைத் தலைவர் மற்றும் தாளாளர் யூசுஃப், செயலர் ஷர்மிளா மற்றும் இயக்குநர்கள் ஆகியோர் வாழ்த்துக்களையும் பாராட்டினையும் தெரிவித்திருந்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!