அமீரகத்தில் தொழில் துறை அமைச்சர் – புத்தகம் வெளியீடு மற்றும் தொழில் முனைவோருக்கான ஆலோசனைக்கூட்டம்..

சமீபத்தில் தாயகத்திலிருந்து துபாய் வருகை தந்த தொழில்துறை அமைச்சர் சம்பத்துடன் துபாயில் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் பல் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக தமிழகத்தில் தொழில் முனைவோருக்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டி மைய்யம் துபாயில் அமைக்கப்பட வேண்டும் என்று ஈமான் அமைப்பின் சார்பாக பொது செயலாளர் ஹமீது யாஸீன் அமைச்சரிடம் கோரிக்கையை எடுத்துரைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் ஈமான் அமைப்பை சார்ந்த துணை பொதுச்செயளாலர் மொகைதீன், தொழில் அதிபர் ஏ.எம்.முகைதீன், ஜமால் முகைதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும்,தொழில் முனைவோர் சம்பந்தமான “தமிழ் தலைவா” நூல் வெளியீட்டு விழாவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் அமீரகத்தின் பல் வேறு பகுதியில் இருந்து தொழில் ஆர்வலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சத்திய பாதை மாத இதழ் ..

சத்திய பாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது… அசத்தியம் அழிந்தது..