இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தமிழ்நாடு புது வாழ்வு திட்ட பணியாளர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்..

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகம் நுழைவு வாயிலில் தமிழ்நாடு புது வாழ்வு திட்ட பணியாளர்கள் நலச் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் முக்கிய கோரிக்கையாக அனைத்து ஊராட்சிகளிலும் மீண்டும் புது வாழ்வு திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதியான ஏற்கனவே புதுவாழ்வுரிட்டம் 1ல் பணி செய்த பணியாளர்களே புது வாழ்வு திட்டம் 2ல் பணி செய்வார்கள் என்பதை நிறைவேற்றுதல், உயர் நீதிமன்ற தடை ஆணையை ஏற்று ஆள் தேர்வு முறைக்கான நியமனத்தை ரத்து செய்யவும், சுனாமி திட்டத்தில் இடைக்கால பணி செய்யும் பணியாளர்களை வருகின்ற TNRTPல் நியமித்திடவும், சமுதாய பணியாளர்கள், புத்தக பராமரிப்பாளர், சமுதாய சுய உதவிக் குழு பயிற்றுநர் மற்றும் சமுதாய மாற்றுத்திறனாளி ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு நியாயமான வகையில் நிலையான ஊதியம் வழங்கிடவும், நிர்வாகிகளுக்கு அமர்வு கட்டணம் வழங்கிடவும், தமிழக அரசுக்கு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

இந்த கவனஈர்ப்பு போராட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர் வரவேற்புரையாற்றினார், மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் கோரிக்கைகள் முன் வைத்தார், மாவட்ட செயலாளர் பிரபு கண்ணன் தமிழக அரசு ஊழியர் சங்கம் மாவட்ட தலைவர் கருணாநிதி, தமிழக ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், சோமசுந்தரம், சேகர், கணேசமூர்த்தி, கோமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..