சூரைக்காற்றின் வேகத்தால் கடல் சீற்றம், விசைப்படகு நாட்டுபடகுகள் சேதம்.

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றம் குறைவாக காணப்பட்ட நிலையில் நேற்று இரவு முதல் கடல் சீற்றம் மற்றும் காற்றின் வேகம் அதிகமாக இருந்து வருகின்றது. இதனால் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடையும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலை காற்றின் வேகம் அதிகரித்து சூரை காற்றாக மாறியதில் ஒரு விசைப்படகு மற்றும் இரண்டு நாட்டுபடகுகள் மற்ற படகுகளுடன் மோதி படகு முழுவதும் சேதமடைந்து கரை ஒதுங்கியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த படகு உரிமையாளர்கள் படகுகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் தூண்டில்வளைவு பாலம் அமைத்தால் இயற்கை சீற்ற காலங்களில் இது போன்ற சம்பவங்களில் இருந்து படகுகளை மீட்டு பாதுகாக்க படலாம், எனவே இராமேஸ்வரம் மீன்பிடிதுறைமுகத்தில் தூண்டில் வளைவு பாலம் அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சத்திய பாதை மாத இதழ் ..

சத்திய பாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது… அசத்தியம் அழிந்தது..