இலங்கையிலிருந்து படகு மூலம் இராமேஸ்வரம் வந்த துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் கைது மத்திய மாநில உளவு துறை போலீசார் விசாரணை..

இலங்கையில் இருந்து கள்ள தோணி மூலம் இராமேஸ்வரம் வந்திருங்கிய துருக்கி நாட்டை சேர்ந்த மஹீர் தேவ்ரிம் என்பவரை கைது செய்து மத்திய, மாநில உளவுத்துறை போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மஹீர் தேவ்ரிம் என்ற 44 வயதுடைய துருக்கிய நாட்டை சேர்ந்த இவர், பல்வேறு பிரச்சனைகள் காரணமாக கடந்த 1993ம் வருடம் துருக்கி நாட்டில் இருந்து வெளியேறி அங்கிருந்து கஜகஸ்தான், தாய்லாந்து மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2017ம் வருடம் மார்ச் மாதம் இலங்கைக்கு சென்ற இவர் இலங்கையின், தலைமன்னார் மற்றும் யாழ்ப்பாணம் பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர் இந்தியா வருவதற்க்கு பல முறை முயற்சி செய்தும் அவர் இந்தியா வர முடியவில்லை. இந்நிலையில் அவரின் தீவிர முயற்சியால் இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் இருந்து படகோட்டி மூலம் 25000 ரூபாய் செலுத்தி, அங்கிருந்து பகல் 12 மணிக்கு கள்ள தோணி (ப்ளாடிக் படகு) மூலம் இராமேஸ்வரத்திற்கு புறப்பட்ட இவர் இரவு 7மணிக்கு இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திற்கு வந்து சேர்ந்துள்ளார்.

கள்ள தோணி மூலம் வெளிநாட்டவர் ஊடுருவிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலிசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துருக்கி நாட்டை சேர்ந்த மஹீர் தேவ்ரிம் என்பவரை, மத்திய மற்றும் மாநில உளவுத்துறை போலிசார் இவர் வந்ததிற்கான முக்கிய காரணம் என்ன? யார் மூலம் வந்துள்ளார்? என்ற கோணத்தில் அவரிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அவரிடம் உள்ள பாஸ்போர்ட் மற்றும் அவர் கொண்டு வந்துள்ள பொருட்களையும் போலிசார் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர். சர்வதேச கடல் எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் கடலோர காவல் படையினரின் கண்களில்படாமல் ஒரு வெளிநாட்டவர் தப்பி வந்தது மக்கள் மத்தியில் பரபரப்பாக உள்ளது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..