கீழக்கரை நகர் நல இயக்கம் மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து நடத்தும் உதடு, அண்ணம் பிளவுபட்டோருக்கான இலவச மருத்துவ முகாம்

இராமநாதபுரம் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறையுடன் கீழக்கரை நகர் நல இயக்கம் மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து நடத்தும் உதடு / உள் அண்ணம் பிளவுபட்டோருக்கான இலவச மருத்துவ முகாம் எதிர்வரும் 10 ஆம் தேதியன்று (10.04.2018) பார்திபனூர் கீழத்தூவல், சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 11 ஆம் தேதியன்று (11.04.2018) தங்கச்சி மடம், வெளிப்பட்டினம் தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நடை பெற உள்ளது.

இது குறித்து கீழக்கரை நகர் நல இயக்கத்தின் செயலாளர் சேகு பஷீர் அஹமது கூறுகையில் ” இறைவனுடைய அருளால் இப்போது கீழக்கரை நகரம், நூறு சதவீதம் உதடு மற்றும் அண்ணம் பிளவுபட்டோர் இல்லாத நகராக திகழ்கிறது. தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக மீனாட்சி மிஷன் மருத்துவமனையினரின் மேலான ஒத்துழைப்போடு, இலவச மருத்துவ முகாம் நடத்தி உதடு மற்றும் அண்ணம் பிளவுபட்டோர் கண்டறியப்பட்டுதுடன் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு குணமாக்கப்பட்டு உள்ளனர்.

இந்த ஆண்டும் இலவச முகாமில் புதிதாக பிறந்த குழந்தைகள் முதல் 40 வயது வரை உள்ள உதடு, உள் அண்ணம் பிளவுபட்டோருக்கு அறுவை சிகிச்சைக்கான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுகிறது.

அறுவை சிகிச்சை தேவைப்படும் போது, பிளாஸ்டிக் சர்ஜரி, மருந்து, மாத்திரை, உணவு, இருப்பிடம் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. ஆகவே நம் இராமநாதபுரம் மாவட்டத்தில் உங்களுக்கு தெரிந்த உதடு மற்றும் அண்ணம் பிளவுபட்டோர் எவரேனும் இருந்தால் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

சத்திய பாதை மாத இதழ் ..

சத்திய பாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது… அசத்தியம் அழிந்தது..