மண்டபத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் பஸ் மறியல்…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், வாரியம் அமைக்காமல் காலத்தை கடத்திய மத்திய அரசை கண்டித்தும், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் என்னற்ற போராட்டங்கள் தினம் தினம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் அனைத்து கட்சிகளின் சார்பாகவும், மற்றும் வணிகர் சங்கங்கள், மற்றும் அனைத்து தரப்பினரும் பங்கு கொள்ளும் வகையில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனை வலியுறுத்தி இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் அனைத்து கட்சிகளின் சார்பாக திமுக நகர் செயலாளர் T.ராஜா தலைமையில் விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் சகுபர் சாதிக் முன்னிலையில் மண்டபத்தை சேர்ந்த அனைத்து கட்சி உறுப்பினர்களும், திமுக கட்சி அலுவலகத்திலிருந்து ஊர்வலாக சென்று அவர்கள் மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் மறியலில் ஈடுபட்டனர்.

உடனே மண்டபம் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். கைது செய்யப்படவர்களில் திமுகவைச் சேர்ந்த 48 பேரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 15 பேர்களும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 பேரையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்க்கு கொண்டு சென்தனர்.

இந்த மறியல் போராட்டத்தில் திமுக இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சம்பத் ராஜா, மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர்கள் பூவேந்திரன், காந்தகுமார், மாவட்ட பிரதிநிதி சாதிக் பாட்சா,ஒன்றிய மீனவரணி செயலாளர் நம்புராஜன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆறுமுகம், விடுதலை சிறுத்தைகள் நகர் செயலாளர் நாகூர் கனி மற்றும் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் முழு அடைப்பையெட்டி மண்டபத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.