மண்டபத்தில் மீனவ கூட்டுறவு சங்க தேர்தல் அதிமுக அணி வெற்றி..

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் FRD 27 மண்டபம் வடக்கு மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த மாதம் 26-ம் தேதி வேட்புமனுக்கள் பெறப்பட்டது. 27 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். 27-ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. இதில் 8 மனுக்கள் திருப்ப பெறப்பட்டது.

இதில் ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மேலும் மீதமுள்ள 18 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இருந்தனர். 18 வேட்பாளர்களும் தீவீர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். தேர்தல் நாளான ஏப்ரல் 2-ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெற்றது. சங்க உறுப்பினர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை மையத்தில் வேட்பாளர்களின் முன்னிலையில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணும் பணி துவங்கியது. 4 சுற்றாக நடை பெற்ற எண்ணிக்கையில் அதிமுகவைச் சேர்ந்த 6 வேட்பாளர்களும் முன்னிலை பெற்று வந்தனர் இறுதி சுற்றில் அதிமுக வைச் சேர்ந்த 6 வேட்பாளர்களும் எதிர்த்து போட்டியிட்டவர்களை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் இன்பராஜ் அறிவித்தார்.

வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விபரங்கள் வருமாறு:-
1.KMA. சீமான் மரைக்காயர்,

2. A. முகம்மது சலீம்,

3. KA. முகம்மது அஜ்மல்,

4. H. சதக்கத்துல்லா,

5. S. முகம்மது ரபீ,

6. P சீனி மரைக்காயர். போட்டியின்றி K.முனியசாமி தேர்வு செய்யப்பட்டார்.

தேர்வு செய்யப் பட்டவர்களுக்கு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

சத்திய பாதை மாத இதழ் ..

சத்திய பாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது… அசத்தியம் அழிந்தது..