Home செய்திகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்…

by ஆசிரியர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் மற்றும் கண்டன போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.

இந் நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் இன்று காலை அக்னி தீர்த்த கடலில் இறங்கி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் கண்டண ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். மேலும் மத்திய அரசு அரசியல் காரணங்களுக்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலத்தை கடத்தி விட்டது என்று குற்றம் சாட்டினர். அதன் பின்பு தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இத்திற்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இந்த போராட்டத்தால் சுற்றுலா பயணிகள் கூடும் இடம் என்பதால் பரபரப்பாக காணப்பட்டது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!