Home செய்திகள்மாநில செய்திகள் மெரினாவில் காவிரிக்காக போராட்டம் நடத்த மாணவர்கள் திரண்டுள்ளனர்-போலீஸ் குவிப்பு

மெரினாவில் காவிரிக்காக போராட்டம் நடத்த மாணவர்கள் திரண்டுள்ளனர்-போலீஸ் குவிப்பு

by Mohamed

சென்னை மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் வரலாற்று சிறப்புமிக்க மிகப்பெரிய தன்னெழுச்சி போராட்டமாக கருதப்பட்டது. ஜல்லிக்கட்டு போராட்டத்தை தொடர்ந்து மெரினாவில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்கள்,மறியல்கள் நாளுக்கு நாள் நடந்த வண்ணம் உள்ளது.

தற்போது தூத்துக்குடியில் பொதுமக்கள் பகுதியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் தொடர் போராட்டதில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் எங்கோ ஒரு முனையில் போராட்டம் நடந்தாலும் மெரினா கடற்கரையில் போலிஸார் குவிக்கப்படுவது வழமையாக உள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததை ஒட்டி மத்திய, மாநில அரசுகள் மீது பல் வேறு அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், பொதுநல அமைப்புகள் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து அதன் அடிப்படையில் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை இதில் அதிகம் பாதிப்புக்குள்ளாவது விவாசாயிகள் மட்டும் என்பதை எவராலும் மறுக்க இயலாது. ஆகையால் இதனை கண்டித்து விவசாயிகள் மாபெரும் ஒரு போரட்டத்தை நடத்த திட்டமிட்டு அனைத்து கட்சியை சார்ந்த தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர்.

இது போன்ற போராட்டங்களில் மாணவர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்பதால் ஜல்லிக்கட்டுக்கு போராடியது போல் விவசாயிகளுக்கும் போராட வேண்டும் என்று சாமானிய மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. அதன் எதிரொலியாக மெரினா கடற்கரையில் தடையை மீறி மாணவர்கள் மீண்டும் ஒரு போராட்டம் நடத்த ஒன்று கூடியுள்ளனர் இதனால் பரபரப்பு  ஏற்பட்டு போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!