மக்களை ஏமாற்றும் கீழக்கரை நகராட்சி – வடிவேலு கிணற்றை காணோம் பாணியில் ஊரணியை காணோம்??…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அனைத்து துறை அரசு அலுவலகங்களான நகராட்சி, தாலுகா அலுவலகம், காவல் நிலையம், அரசு மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம், பிஎஸ்என்எல் அலுவலகம் போன்றவைகளை கீழக்கரை சார்ந்த இஸ்லாமிய பெருமக்கள் கீழக்கரை பகுதியை சார்ந்த பொதுமக்களுக்கு பயன்பட வேண்டும் என்ற உயரிய நோக்கில் நிலத்தை இலவசமாக கொடுத்தாலும், அரசு அதிகாரிகள் சரியாக செயல்படுவதில்லை. நேற்று தினந்தந்தி நாளிதழில் நகராட்சி சார்பாக நடைபெற்ற பணிகளை பட்டியலிட்டு விளம்பரம் செய்துள்ளனர்.

அதில் கீழக்கரையில் உள்ள அனைத்து ஊரணிகளும் தூர்வாரப்பட்டு மழைநீர் தேக்கி வைக்கும் நிலையில் பராமரிப்பில் உள்ளதாக விளம்பரம் வந்துள்ளது. கீழக்கரையில் ஊரணிகள் எங்குள்ளது..? எங்கு சுத்தம் செய்யப்பட்டது..? என்று தெரியவில்லை.

இதுபற்றி 21வது வார்டு முன்னாள் கவுன்சிலர் ஜெயபிரகாஸ் கூறியதாவது, “தகவல் உரிமை அறியும் சட்டத்தின் கீழ் இதுவரை நடைபெற்ற பணிகள் குறித்து விபரம் கேட்டுள்ளேன். எனக்கு விபரம் தெரிந்தவரை ஊரணிகளை கண்டதே இல்லை. ஆனால் எந்த ஊரணியை தூர் வாரினார்கள் என்று அறிந்து கொள்ள ஆவலாக உள்ளது. இன்னும் சில நாட்கள் கழித்து கடலை சுத்தம் செய்தோம் என்று கூட விளம்பரம் செய்யலாம் ஆச்சரியப்பட ஒன்றுமில்லலை” என்றார்.

கீழக்கரை மக்களையும், அரசியல் கட்சியினரையும், சமூக ஆர்வலர்களை கீழக்கரை நகராட்சி நிர்வாகம் நன்றாக ஏமாற்றுகிறது என்பது மட்டும் தெளிவாகிறது.

சத்திய பாதை மாத இதழ் ..

சத்திய பாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது… அசத்தியம் அழிந்தது..