அமமுக கட்சியினர் வேட்புமனு நிராகரிப்பு. கட்சியினர் ஆவேசம் …. .

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மீனவ மகளிர் கூட்டுறவு சங்க தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து கீழக்கரை நகர் செயலாளர் சுரேஷ் தலைமையில் தேர்தல் அதிகாரி ஜேசுராஜவிடம் ஆட்சேபணை  தெரிவித்தனர்.

இதுபற்றி கீழக்கரை நகர் செயலாளர் சுரேஷ் கூறியதாவது, மீனவ மகளிர் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்த 26.03.18 அன்று வேட்பு மனு தாக்கலும், 27.03.18 அன்று வேட்பு மனு மறுபரிசீலனையும், 28.03.18 இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் 26.03.18 அன்று மாலை அதிகாரி கையெழுத்துடன் அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் காளீஸ்வரி, செய்யது ராவியத்தும்மா, அத்தியா பேகம், ஆயிஷத் பேகம், பரிதா பீவி, ஜென்னத்துல் பிர்தோஸ் உம்மா, நிஜாம் பீவி ஆகியோரது வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த ஷாஜகான்பீவி, சித்திபாயிஷா, நிஹ்மத் நிஷா, ஹினாயா பேகம்,ஜிம்மா பாத்திமா,நஸ்ரின் தஸ்லிமா ஆகியோரது மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது வேண்டுமென்று எங்களை பலிவாங்கும் நோக்கத்துடன் அதிகாரிகள் செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து தேர்தல் அதிகாரி ஜேசுராஜாவோ,அவர்கள் சங்கத்தின் பெயரை குறிப்பிடவில்லை, அதனால் தான் தள்ளுபடி செய்தோம். மேலும் இதுபற்றி தகவல் தெரியவேண்டும் என்றால் இணை இயக்குநரிடம் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்றார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..