Home செய்திகள் சாயல்குடி அரசு உப்பு நிறுவன ஊழியர்கள் தனியார் மயத்தை எதிர்த்து சாலை மறியல்..

சாயல்குடி அரசு உப்பு நிறுவன ஊழியர்கள் தனியார் மயத்தை எதிர்த்து சாலை மறியல்..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே வாலிநோக்கத்தில் அரசுக்கு சொந்தமான உப்பு நிறுவனம் இயங்கிவருகிறது. இதில் 1450 பேர் பணிசெய்கின்றனர். இங்கு தயாராகும் உப்புக்களை சுத்திகரித்து விற்பனை செய்வதற்காக கடந்த 20.04.2017 அன்று தமிழக அரசும் டாட்டா நிறுவனமும் இணைந்து சுமார் ஐந்து கோடியே 65 லட்சம் செலவில் தொழில் துறை அமைச்சர் சம்பத் மற்றும் தகவல் தொழில்துட்பதுறை அமைச்சர் மணிகண்டன் ஆகியோரால் துவங்கி வைக்கப்பட்டது.

இந்த சுத்திகரிப்பு நிலையத்தால் ஒரு மணி நேரத்தில் 7.50 டண் சுத்திகரிக்கப்பட்ட உப்பு தயாரிக்கப்படும். ஆனால் தற்போது தனியார் நிறுவனத்தால் ஒரு மணி நேரத்திற்கு 3.50 டண் மட்டுமே தயாராகிறது, எனவும் இந்த சுத்திகரிப்பு பணியினை தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்காமல் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் பணியாட்களிடமே வழங்க வேண்டும் என பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் பயனில்லை. ஆகவே இன்று (27-03-2018) பணியாளர்கள் சாலைமறியலில் ஈடுபட முற்பட்டனர். அவர்களுடன் முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பாண்டியனும் கலந்து கொண்டார்.

சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ப்போவதாக கிடைத்த தகவலையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சமாதானம் செய்ய சட்டமன்ற உறுப்பினர் முற்பட்டார். போராட்டக்காரர்கள் அதை ஏற்றுக்கொள்ளாததால் அங்கிருந்து உடனடியாக இடத்தை காலி செய்து கிளம்பினார். அதனைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!