Home செய்திகள் தனுஸ்கோடியில் ரூபாய் 300 கோடி மதீப்பீட்டில் காற்றாலை அமைக்க மத்திய அரசு ஆய்வு..:

தனுஸ்கோடியில் ரூபாய் 300 கோடி மதீப்பீட்டில் காற்றாலை அமைக்க மத்திய அரசு ஆய்வு..:

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகேயுள்ள தனுஸ்கோடியில் ரூபாய் 300 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசு நிறுவனம் காற்றாலை மூலம் மின் உற்பத்தியை துவங்க ஆய்வுப்பணி மேற்கொன்டு வருகிறது.

1964ம் ஆண்டிற்கு முன் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த துறைமுக நகரம் தனுஷ்கோடி . 1964-ம் ஆண்டில் ஏற்ப்பட்ட புயலின் கோர தாண்டவத்தால் துறைமுக நகரம் என்ற சிறப்பு பெயரை இழந்து மக்கள் வாழ தகுதியில்லாத இடமாக மாறிவிட்டது. புயலின் கோர தாண்டவத்தால் சிக்கி சிதைந்து போனது போக மீதமுள்ள எச்சங்களான தபால் நிலையம், தேவாலயம், ரயில் நிலையம் மற்றும் கோவில்களை சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் பார்த்து வருகின்றனர். இந்தியாவின் முதல் நிலப்பரப்பு வரை செல்ல தற்போது சாலை போடப்பட்டுள்ளது.

இப்பகுதியில் ஆண்டுதோறும் கடல்காற்று அதிக அளவில் வீசிவருவதால் இதனை பயனுள்ள வகையில் பயன்படுத்தி கொள்ள ரூபாய் 300 கோடி மதிப்பீட்டில் ஐந்து காற்றாலைகள் அமைத்து 30 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய மத்திய மரபுசார எரிசக்திதுறை திட்டமிட்டு அதற்கான ஆய்வுப்பணிகளை மேற்கொன்டுவருகிறது.

இதனையடுத்து பொறியாளர்கள் குழு அரிச்சல்முனை கடற்கரைப்பகுதி அருகே லைடர் கருவி மூலம் வானில் லேசர் ஒளியைச் செலுத்தி காற்றின் வேகம் உப்புத்தன்மை, துருவின் அடர்த்தி மற்றும் ஈரத்தன்மை குறித்த ஆய்வுகளை மேற்கொன்டுவருகின்றனர் ஆய்வு அறிக்கைகள் அவ்வப்போது தலைமை ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பிவைகக்கபட்டு ஆய்வு முடிவுகள் அவ்வப்போது பதிவுசெய்யப்பட்டுவருவதாக ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள பொறியாளர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆய்வுப்பணிகள் சுமார் 30 நாட்கள் நடைபெறும் என்றனர். தேவைபப்டும் பட்டசத்தில் நீடிக்கவும் வாய்ப்புள்ளதாகவும், ஆய்வுப்பணிகள் நிறைவடைந்தவுடன் இந்த ஆண்டு இறுதிக்குள் இப் பகுதியில் அரசு திட்டமிட்டபடி காற்றாலை மின்உற்பத்தி துவங்கும் என்று கூறினர். இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் தனுஷ்கோடிக்கு மட்டும்மின்றி சுற்றுலாத்தலமான ராமேஸ்வரத்திற்கும் முழுமையாக வழங்க முடியும் எனவும் இத்திட்டம் வருங்காலங்களில் தட்பவெப்பநிலைகளை பொருத்து விரிவாக்கம் செய்யவும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!